Thursday, March 29, 2012
கீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது!
சென்னை தேசிய ஒருமைபாட்டு கலாச்சர அகடாமி கலை மற்றும் திரை உலகில் சிறந்த நபர்கள்,சமூக மேம்பாட்டு பணிகளுக்காக சேவை செய்து வரும் அமைப்புகள் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட்டு வழங்கும் சென்னையில் நடைபெற்றது.
ஆண்டு தோறும் நடைபெறும் இவ்விழாவில் இந்த ஆண்டில் சேடோ தொண்டு நிறுவனம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி பணியுடன் கிராமப்புர இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வரும் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீனுக்கு விஷ்வஜோதி 2012 விருது வழங்கப்பட்டது.இந்த விருதை திரை உலகின் முண்ணனி பாடகி எல்.ஆர் ஈஸ்வரி நீதிபதி ஞானபிரகாசம் முன்னிலையில் வழங்கினார்.
விருது பெற்று மாவட்டத்திற்கும்,கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்த முதல்வர் அலாவுதீனை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்து காதர்,கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.