Sunday, March 25, 2012
நீண்ட கால தேவையான குப்பைதளம் அமைக்கும் பணி தீவிரம்!
பட விளக்கம் : குப்பை தளம் அமைக்கும் பணியை நேரில பார்வையிடும் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா
கீழக்கரை நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கென்று தளம் இல்லாமல் இருந்து வந்தது.தில்லையேந்தல் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் தனியாரால் கீழக்கரை நகராட்சிக்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தளம் அமைப்பதற்கு தளம் வழங்கப்பட்டது. ஆனால் குப்பை தளம் அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி முடங்கியது.
இந்நிலையில் புதிய நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இது குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட்டதால் தற்போது அத்தளத்தில் சுற்றுசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் எக்ஸ்னோர அமைப்பினர் உள்ளிட்ட பலர் இத்தளத்தை செம்மைபடுத்தி செயல்படுத்த நகராட்சியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இத்தளம் அமைவதற்கு உள்ள இடையூறுகளை அகற்ற முக்கிய பங்காற்றிய நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா இத்தளம் அமைப்பதற்கான பணியை நேரில் அடிக்கடி சென்று பார்வையிட்டு வருகிறார்.இது போன்று நகராட்சி துணை தலைவர் ,கவுன்சிலர்களும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.
இது போன்று நேரில் சென்று பார்வையிட்டு வருவது பணியை விரைவாகவும்,நேர்த்தியாகவும் செய்வதற்கு வழிவகுக்கும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய கீழக்கரை குப்பைகள் கீழக்கரை வெல்பேர் தொண்டு நிறுவனம் உதவியால் தனியார் தோட்டத்தில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைதளம் அமைக்கும் பணி முடிவடைந்து கீழக்கரையில் உள்ள குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு சுத்தமான நகராக நம் கீழக்கரை திகழ வேண்டும் என்பதே நம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இப்பணியை இணைந்து செய்து முடிக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குறியவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.