Wednesday, March 7, 2012

காரைக்குடி,கீழ‌க்கரை வ‌ழியாக‌ ரயில்பாதை திட்டம் செயல்படுத்த வ‌லியுறுத்துவோம்! ராம‌சுப்பு.எம்பி பேட்டி !





காரைக்குடி,கீழ‌க்கரை வ‌ழியாக‌ ரயில்பாதை திட்டம் செயல்படுத்த வ‌லியுறுத்துவோம்! ராம‌சுப்பு.எம்பி பேட்டி !


திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு,ராமசுப்பு துபாய் வாழ் திருநெல்வேலி மாவட்ட மக்களின் சார்பான வரவேற்பு நிகழ்ச்சி துபை தேரா ஸ்டார்மெட்ரோ ஹோட்டல் உள்ளரங்கில் நடைபெற்றது.

சிறுமி பாத்தின் ஜூமானாவின் கிராத்துடன் துவங்கிய விழாவில் மேலப்பாளையம் அஹமது முகைதீன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் அமீரக சங்கங்களின் சார்பில், காயல் ஜே.எஸ்.ஏ. புகாரி, ரவண சமுத்திரம் முகைதீன், குத்தாலம் அஸ்ரப், ஜெஸிலா ரியாஸ்,கிளியனூர் இஸ்மத், காவிரிமைந்தன், ஹமீதுரஹ்மான், சபேசன்,மற்றும் ஜெகந்நாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ச்சியாக சிறப்புரையாற்றிய பேட்டை த.மு.அஹமது மீரான்,

திருநெல்வேலி மாவட்டத்திற்கு காயிதேமில்லத் பெயர் சூட்டுதல், சுத்தமல்லி சங்கர்நகர் புறவழிச்சாலை அமைத்தல், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கோரிக்கைகளை வைத்தார்.

அதன் பின் சிறப்புரையாற்றிய ஈடியே அஸ்கான் மற்றும் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சலாஹூதீன் , பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு அவர்களின் சாதனைகளைப் பாராட்டி பேசியதோடு, வியாபார ரீதியாக தென்மாவட்டங்கள் பயன் பெறும் பொருட்டு, காரைக்குடியிலிருந்து, தூத்துக்குடிக்கு இராமநாதபுரம் வழியிலான இருப்புப்பாதை அமைக்ககோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் வைத்தார்.


பின்பு உரையாற்றிய பொட்டல்புதூர் அமீர்கான்,
அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேச,தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு இந்த அனைத்து கோரிக்கைகளையுக் உரிய நேரத்த்தில் அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.



விழாவின் சிறப்பம்சமாக திரு.ராமசுப்புவுக்கு நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் அமீரக சங்கங்களின் சார்பாக பொன்னாடை, பூங்கொத்து, மற்றும் நினைவுபரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காரைக்குடி கீழ‌க்க‌ரை புதிய‌ ர‌யில்பாதை காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், கீழக்கரை வழியாக கன்னியாகுமரி வரை 1,959 கோடி ரூபாயில், அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி முடிந்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இத்திட்டம் நிறைவேறினால் புளியால், திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, ராஜாக்கள் பாளையம், சாயல்குடி, குளத்தூர், பனையூர், மேல்மருதூர் உட்பட பல ஊர்களை சேர்ந்த மக்கள் பயனடைவர்.

இத்திட்டம் குறித்து ராம‌சுப்பு.எம்பியிட‌ம் கேட்ட‌ போது,

ம‌துரை விமான‌ நிலைய‌த்தை ப‌ன்னாட்டு விமான‌ நிலையமாக‌ அறிவிக்க‌ கோரி தென்மாவட்ட எம்பிக்க‌ள் குழுவாக‌ சென்று வ‌லியுறுத்தினோம் அதே போல் இத்திட்ட‌த்தை நிறைவேற்ற‌ தென் மாவ‌ட்ட‌ எம்பிக்க‌ள் குழுவாக‌ ர‌யில்வே துறையை வ‌லியுறுத்தி நிறைவேற்ற‌ முய‌ற்சி எடுப்போம் என்றார்.

தகவல் : கீழை ராசா

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.