Tuesday, March 6, 2012
மக்கள் ஆர்வம் காட்டாத காவல்துறையின் ஆலோசனை கூட்டம்!
மேடையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,தங்கம் ராதாகிருஸ்ணன்,ஆசாத் உள்ளிட்டோரை காணலாம்
தகவல்:சாலிஹ் ஹுசைன்
காவல்துறையின் சார்பில் பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை செய்வதற்கு காவல்துறையின் சார்பில் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதால் கூட்டத்தில் பேசியோர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் பேசும் போது,
கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து நம் ஊருக்குள் வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளர்கள் பற்றிய முழு விபரங்களை, அவர்களை வேலையில் அமர்த்தி இருக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மிக விரைவில் காவல் நிலையத்தில் அளித்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்த லெப்பை தம்பி பேசியதாவது,
"நம் நகர் நலனுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இஞ்சினியர் ஆசாத் அவர்களுக்கும், இஞ்சினியர் கபீர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரம், இது போன்ற பொது மக்களுக்கு அவசியமான, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. என்றார்
சாலிஹ் ஹுசைன் கலந்து கொண்டு பேசிய போது,
நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் போது நமதூரை சேர்ந்த ஒரு சிலர் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதை தடுக்கிறார்கள்.இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார் மேலும் அவர் கூறியதாவது, நமதூர் மக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கெடுக்காதது மிகவும் வருந்ததக்கது என்றார்.
பொதுமக்கள் காவல்துறையினரிடர் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நடந்தப்பட்ட இக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.ஆனால் குறைந்த அளவில் மக்கள் கலந்து கொண்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கலந்து கொண்டோர் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.