Saturday, March 10, 2012
நீண்ட காலத்துக்கு பிறகு சுத்தப்படுத்தப்பட்ட அரசின் மலேரிய தடுப்பு மையம்!
சுகாதார குறைவினால் தான் மலேரியா ஏற்படுகிறது.அதை தடுப்பதற்கு மக்கள் அரசின் மலேரியா கிளினிக் செல்கிறார்கள் ஆனால் அங்குதான் மலேரியா உற்பத்தியாகிறதோ என்று நினைக்கு அளவுக்கு அங்குள்ள வளாகம் மிகவும் சுத்தமில்லாமல்,
நீண்ட காலமாக சுத்தப்படுத்தபடமல் குப்பைகளும்,முட்புதர்களும் நிறைந்து சுகாதாரமில்லாமல் காணப்பட்டது .இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டு அவரின் உத்தரவின் பேரில் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மலேரியா தடுப்பு மைய ஊழியர்களில் துணை கொண்டு வளாகத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது.மேலும் அங்குள்ள சில இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளதாக ஊழியர்கள் கூறினர்,இதை தங்கள் சொந்த செலவில் சரி செய்து தருவதாக நகராட்சி தலைவர் ராபியத்துதுல் காதரியாவும் ,துணை தலைவர் ஹாஜா முகைதீனும் உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுல்தான் கூறுகையில் ,
மலேரிய கிளினிக்கிற்கு செல்பவர்கள் கொசுக்கடி இல்லாமல் வந்ததில்லை அந்தளவிற்கு அங்கு அசுத்தமாக இருந்ந்தது.அரசின் மலேரியா கிளினிக் வளாகத்தை நகராட்சி தலைவர் தலையிட்டுதான் சுத்தப்படுத்த வேண்டுமா? இதை அன்றாடம் சுத்தப்படுத்த வேண்டியது அரசு ஊழியர்களின் கடமையில்லையா? இனியாவது அங்குள்ள ஊழியர்கள் மலேரியா மையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.