Thursday, March 8, 2012

கீழக்கரையில் உடையும் நிலையில் (5.80லட்சம் லிட்டர் கொள்ளளவு)குடிநீர் தொட்டிகள் !





கீழக்கரை வடக்குத்தெரு (மணல்மேடு) பகுதியில் அமைந்துள்ள குடி தண்ணீர் தொட்டிகள் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

இங்கு 2 குடி தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் உள்ளன.ஒன்றில் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவும்,மற்றொன்றின் 1லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும் கொண்டது.
இந்த தொட்டியிலிருந்து கீழக்கரை நகருக்கு காவேரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து அப்ப‌குதியை சேர்ந்த நாசர் கூறிய‌தாவ‌து,நீண்ட காலமாக சேதமடைந்து இருக்கும் இந்த‌ தொட்டி த‌ற்போது மேலும் சேத‌ம‌டைந்து உடையும் நிலையில் உள்ள‌து.தொட்டியை தாங்கி பிடிக்கும் ‌ தூண்க‌ள் சேத‌ம‌டைந்து உள்ள‌ன‌.இத‌னால் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ள‌து.

மேலும் இடியும் நிலையில் இருப்ப‌தாலோ என்ன‌வோ ந‌க‌ராட்சி ப‌ணியாள‌ர்க‌ள் யாரும் குடிநீர் தொட்டியை சுத்த‌ம் செய்வ‌தில்லை இத‌னால் தொட்டியின் உள் ப‌குதி சுத்த‌ப்ப‌டுத்தாம‌ல் உள்ள‌து.உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் க‌வ‌னித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.



இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

இத்தொட்டிகளை அகற்றி விட்டு புதியதாக‌‌ 8 ல‌ட்ச‌ம் லிட்ட‌ர் கொள்ள‌ள‌வு கொண்ட‌ நீர்தேக்க‌ தொட்டியை க‌ட்டுவ‌த‌ற்கு ஆலோசித்து வ‌ருகிறோம் என்றார்.

1 comment:

  1. இத்தொட்டிகளை அகற்றி விட்டு புதியதாக‌‌ 8 ல‌ட்ச‌ம் லிட்ட‌ர் கொள்ள‌ள‌வு கொண்ட‌ நீர்தேக்க‌ தொட்டியை க‌ட்டுவ‌த‌ற்கு ஆலோசித்து வ‌ருகிறோம் என்றார் ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா - MADAM, Please take EARLY ACTION to proceed as stated ...... to gain the PERMANENT REWARD from ALLAH subuhanavatha'alaa this is "SADHAKATHUN JARIYA" (even this is GOVT Project)..... Good LUCK & Best wishes .....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.