Monday, March 5, 2012
கீழக்கரையில் 40 ஆண்டாக காவல் பணியில் கூர்க்கா !
கீழக்கரையில் 40 ஆண்டுகளாக பணி புரியும் சந்திர பகதூர் சிங்
(செவ்வாய் மே 3 2011 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையின் மறு பதிப்பு)
கீழக்கரை.மே.3.கீழக்கரை பகுதி குடியிருப்புகளில் திருட்டு,கொள்ளைகளை தடுக்கும் பணியில் பல்லாண்டுகளாக கூர்க்காக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உய்.....நள்ளிரவில் சன்னமாக ஒலிக்கும் விசி்ல் உணர்த்திடும் கூர்க்காக்களின் வருகையை சைக்கிளிலும்,நடந்தும் விழி அயரா விழிப்புடன் காவல் பணிக்காக வலம் வரும் கூர்க்காக்களி்ன் தொலைகின்ற தூக்கமே ,குடியிருப்பு்வாசிகளின் நிம்மதியான உறக்கத்திற்க்கு காரணியாகிறது.திருட்டு,கொள்ளை அசாம்பவிதங்களை தடுப்பதி்ல் இவர்களின் பங்கு மகத்தானது.இவர்களால் தடுக்கப்படும் திருட்டு ,கொள்ளை முயற்சி சம்பவங்கள் வெளியே அதிகம் பேசப்படுவதில்லை.தவறி நடந்து விட்ட சம்பவமே உற்று நோக்கப்படும் ,பரபரப்பாக பேசப்படும்.
நேபாளத்தை சேர்ந்த இந்த கூர்க்காக்கள் வீடுகளை காக்கும் பணியில் மட்டுமல்ல இந்திய ராணுவத்திலும் பணியாற்றுகின்றனர். தற்போது 7 கூர்க்கா படை பிரிவுகளில் சுமார் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூர்க்காக்கள் பணிபுரிகின்றனர்.
இந்திய- நேபாள -பிரிட்டன் உடன் படிக்கையின் படி நேபாளத்து மக்கள்
இந்தியாவிலும் பிரிட்டனிலும் ராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
விசுவாசம்,நம்பிக்கைக்கு பாத்திரமான இவர்களின் வீரத்தை கருத்தில் கொண்டு படி படியாக கூர்க்கா பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் பகதூர் பிரிவினர் வீரம் செறிந்தவர்களா்கவும் கருதப்படுகிறது.
கீழக்கரை பகுதியில் சந்திர பகதூர் சிங்(55),கோகன் பகதூர்(48),தில் பகதூர்(40
), பல பகதூர்(40) ஆகிய 4 கூர்க்காக்கள் இரவு நேரங்களில் பாது்காப்புக்காக சுற்றி வருகின்றனர்.கொளுத்தும் மழை,கொட்டும் பனியா்ல் இவர்களின் பணி ஒரு நாளும் தடைப்பட்டதில்லை.
இவர்களில் நேபாளத்தில் பஜங் பகுதியை சேர்ந்த சந்திர பகதூர் சிங் 15 வயதில் கூர்க்கா பணிக்கு கீழக்கரை வந்தார்.
கடந்த 40 ஆண்டாக பணிபுரியு்ம் அவர் கூறியதாவது,
இது வரை கீழக்கரையி்ல் 50க்கும் மேற்பட்ட திருட்டுக்களை தடுத்து்ள்ளேன்.திருட்டு முயற்சிகளி்ல் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரை விரட்டி பிடித்துள்ளேன்.நள்ளிரவு நேரங்களில் சந்தேகபடும் படியா்க யாரேனும் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் கொடுத்து விடுவேன். என் குடும்பம் நேபாளத்தி்ல் உள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை விடுமுறைககு ஊர் செல்வேன்.எனது மாத வருமானம் ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ10(சி்ல வீடுகளில் ரூ50 வரை) பெறப்படும் சிறிய தொகை மூலம் மாதம் ரூ 4 ஆயிரத்திலிருந்து ரூ 5000 வரை கிடைக்கும்.வேறு எந்த வருமானமு்ம்
இலலை. மேலு்ம் இந்த ஊர் மக்களுக்கு பணி செய்வது ஆத்ம திருப்தியை அளிக்கிறது .தற்போ்து எங்கள் நேபாளத்தை சேர்ந்த வர்கள் கூர்க்கா பணிக்கு அதிகம் வருதில்லை காரணம் வெவ்வேறு தொழில்களி்ல் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்றார். வளைந்த ,குறுகலான சந்து்கள் நிறைந்த இப்பகுதியில் காவல் பணியி்ல் ஈடுபடும் கூர்க்காக்களை இப்பகுதிவாசிகள் பாராட்டுகின்றனர்.
இது குறித்து கீழக்கரை இப்ராகிம் கூறுகையில் ,
கீழக்கரை மற்று்ம் அதன் சுற்றுபகுதிகளில் திருட்டுகளை தடுப்பதில் இவர்களின் பங்கு அதிகம் எனவே ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி நிர்வாகம் இவர்களை பாரட்டி பரிசளிக்க வேண்டு்ம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
ஊர்காக்க வந்த நல்ல கூர்க்கா
ReplyDelete