Wednesday, March 28, 2012

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் ஆபரேசன் ஹம்லா -2 ஒத்திகையால் பரபரப்பு !


ஒத்திகையில் பங்கேற்ற காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் .

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தீவிரவாத தடுப்பு ஒத்திகையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆபரேசன் ஹம்லா-2 என்ற பெயரில் ஒத்திகை கீழக்கரை கடல் பகுதியில் நடத்தப்பட்டது.ஒத்திகை என்று அறியப்படாததால் தீவிரவாதிகள் பிடிபட்டதாக கீழக்கரையில் செய்திகள் பரவியது

அரசின் பாதுகாப்பு படையினர் மாறுவேடத்தில் டம்மி ஆயுதங்கள் ,வெடிபொருட்களுடன் கடல் மார்க்கமாகவோ,தரை வழி மார்க்கமாகவோ வருவார்கள் இவர்களை காவல்துறையினர் கடல் மார்க்கமாகவோ,தரைவழிமார்க்கமாகவோ தப்ப விடாமல் சதி ஒத்திகையை தடுத்து பிடிக்கப்படவேண்டும் .இதன் மூலம் காவல்துறையினரை கூடுதல் உஷார் படுத்த முடியும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற ஒத்திகை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் டி.எஸ்.பி முரளிதரன் தலைமையில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுரேஸ்,கீழக்கரை எஸ்.ஐ.கார்மேகம்,தனிப்படை ஏட்டு செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்ரேஷன் ஹம்லா-2 என்ற பெயரில் கீழக்கரையில் ந‌ட‌ந்த‌ இந்த ஒத்திகையின் போது இரவில் தூத்துக்குடி ஆந்தோனி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைபடகில் பத்து பேர் கீழக்கரை புதிய ஜெட்டி பாலத்தில் வந்து இறங்கினர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இவ‌ர்க‌ளை சோத‌னை செய்து கைது செய்த‌ன‌ர்.

இந்த‌ ப‌த்து பேரில் த‌மிழ்நாடு க‌மாண்டோ ப‌டையை சேர்ந்த‌ பாண்டிய‌ராஜ‌ன்(22),முர‌ளித‌ர‌ன்(21)பாஸ்க‌ர்(22),இளையராஜா ம‌ற்றும் இந்திய‌ காவ‌ல் ப‌டையை சேர்ந்த‌ பிராசாந்த்(34),க‌ருப்ப‌ச்சாமி(22) மேலும் தூத்துக்குடி மீன‌வ‌ர்க‌ள் ஜான்ச‌ன்(48) அந்தோணி(34),பெல்லாரிமெயின்(44) தாம‌ஸ்(62) உள்ளிட்டோர் இந்த‌ ஒத்திகையில் ப‌ங்கேற்ற‌ன‌ர்.


ஒத்திகையின் போது விழிப்புட‌ன் செய‌ல்ப‌ட்டு 10பேரையும் பிடித்த‌ கீழ‌க்க‌ரை காவ‌ல்துறையின‌ரை எஸ்.பி.ம‌கேஸ் குமார் பாராட்டினார்.

3 comments:

  1. congratulation kilakarai police but last year chennail ithai pola nadantha sothanaiel enna nadanthathu theriuma Airportil irunthu varumpothu sothanai nadanthathu angayum lanjam 300 rupees vaangivittu anuppinargal that police

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கீழக்கரை காவல்.அனால் இதற்க்கு முன்பு இதை போல சோதனை சென்னயில் நடந்தது அப்பொழுது என் நண்பர்கள் விமானநிலையத்தில் இருந்து வரும்பொழுது வலி எல்லாம் காவல் துறை ஒரு ஒரு இடமாக சோதனை செய்தார்கள் இறுதியாக என்ன வழக்கம் போல நூறு,இருநூறு தான். அனால் இது பொது மக்களுக்கு இடையூறு தான்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கீழக்கரை காவல்.அனால் இதற்க்கு முன்பு இதை போல சோதனை சென்னயில் நடந்தது அப்பொழுது என் நண்பர்கள் விமானநிலையத்தில் இருந்து வரும்பொழுது வலி எல்லாம் காவல் துறை ஒரு ஒரு இடமாக சோதனை செய்தார்கள் இறுதியாக என்ன வழக்கம் போல நூறு,இருநூறு தான். அனால் இது பொது மக்களுக்கு இடையூறு தான்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.