Sunday, March 11, 2012

கீழக்கரை கிழக்குதெருவில் புதிய மருத்துவமனை!ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!கீழக்கரை கிழக்குத் தெருவிலுள்ள , பழைய கைராத்துல் ஜலாலியா ஆரம்ப பள்ளி வளாகத்தில் இன்று 10 மணியளவில், பொது மக்களின் மருத்துவ சேவைக்காக புதிய மெடிக்கல் கிளினிக் கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்ட் சார்பாக துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ மனையை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் திறந்து வைத்தார்.

இது குறித்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் டிரஸ்டின் தலைவர் முஹம்மது ஜுல்பிகார் கூறும் போது, "நம் கீழக்கரை நகரில் குறிப்பாக கிழக்குத் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவமனைகளோ, அவசர சிகிச்சைகளுக்கான வழிகளோ இல்லை. நமது கீழக்கரை நகரமும், மிக வேகமாக பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லை. பல சிறப்பு சிகிச்சைகளுக்கு இராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் தான் தற்போது உள்ளது.

ஆகவே தான், நம் மக்களுக்கு மிக அருகாமையிலேயே, நல்ல தரமான சிகிச்சைகளை, மிகக் குறைவான கட்டணத்தில் செயல்படுத்த முனைந்துள்ளோம். இதனால் பொது மக்களுக்கு, வீட்டிலிருந்து, மருத்துவமனைக்கு செல்லும் போக்குவரத்து செலவுகள் பெருமளவு குறைகிறது. இறைவன் நாடினால், விரைவில் இன்னும் பல சிறப்பு மருத்துவர்களை முழு நேரப் பணிகளில் அமர்த்தி சேவையாற்ற இருக்கிறோம்" என்று மிகுந்த அக்கறையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்தார்.

இது குறித்து இந்த மருத்துவமனையின் டாக்டர். ஜவாஹீர் ஹுசைன் கூறும் போது "நம் நகர் மக்களின் நலனுக்காக, எந்தவித இலாப நோக்கமுமின்றி துவங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவ சேவையை, பொது மக்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கீழக்கரை முஸ்லீம் டிரஸ்டின் தலைவர் ஆசீக் கூறியதாவது,
இது போன்ற நம் கீழக்கரை நகர் மக்களுக்கான, மருத்துவ சேவைகள் வரவேற்கத்தக்கது. நமது ஊரில் பல்வேறு விதமான சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனைகளை நாடி, தொலை தூரம் பயணித்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான தரமான சிகிச்சைகளை வழங்க துவங்கி இருக்கும் இந்த நல்ல சேவை, தொய்வில்லாமல் தொடர இறைவனை வேண்டுகிறேன்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.

த‌க‌வ‌ல் : சாலிஹ் ஹுசைன்

3 comments:

 1. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 2. இந்த முயற்சி பாராட்டிற்குரியது, எனினும் யூசுப் சுலைஹா மருத்துவமனை பல காரணங்களினால் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. இதனை மனதிற்கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 3. if you see டாக்டர். ஜவாஹீர் ஹுசைன் then ask you to admit யூசுப் சுலைஹா மருத்துவமனை பல காரணங்களினால் ...then charge you one visit RS 500 , one day 3 visit RS 1500 ...i got very bad experience...

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.