Thursday, March 1, 2012

சுற்றுப்புற‌ சூழலை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவியர் !



சுற்றுப்புற சூழலை பாதுக்காக்கும் விதமாகவும்,கடல் வாழ் மற்றும் பிற உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாள் தேசிய ஆய்வரங்க முகாம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது.

கீழ‌க்க‌ரை புதிய‌ க‌ட‌ற்க‌ரை பால‌ம் அருகே ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காதரியா தொட‌ங்கி வைத்தார்.இதில் க‌ல்லூரி மாண‌வ‌,மாண‌விய‌ர் உள்ப‌ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

2 comments:

  1. சுனாமிMarch 1, 2012 at 11:23 PM

    அன்பு சகோதரியே, தங்களின் சுறுசுறுப்பான பணிகளை கண்டு கேட்டு உண்மையிலேயே உள்ளம் குதுகலிக்கிறது. உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த காலக்கட்டத்தில் தங்களின் கனிவான நடவடிக்கைக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

    கலங்கரைக்கு மேற்குகிலும், புதிய கடல் பாலத்திற்கு அருகிலும் மற்றும் பழைய சுங்கத்துறை அலுவலகத்திற்குக மேற்கிலும் கடலில் கலக்கும் கழிவு நீர் மற்றும் கழுவுகளை மறு சுழற்சி முறையில் சுத்தம் செயது கடலில் கலக்கச் செய்யலாமே? இதற்கு உண்டான செலவுக்கு நமது தொகுதி நிதியிலிருந்து கேட்டு பெறலாமே?

    இந்த சுற்றுபுற சுகாதார சீர்கேட்டால் சுவை மிகுந்த ஓரா மீன் இனம் அழிந்து வருகிறது. தற்சமயம் பெரிய அளவு ஓரா மீன்களும் குறிப்பாக கருத்த ஓராவும் கிடைப்பதில்லை. அரிதாகி விட்டது.கீழக்கரை கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய் அற்புதமான சைவ மீன் இனம்.

    கடும் புயலினால் ஏற்படும் ஆழிப் பேரலையின் சீறற்த்தை தணிக்க நமக்கு இறைவனால் அருளப்பட்ட
    கரை ஓரத்தில் இருக்கும் பாறைகளின் இடுக்குகளில் பாசியை மட்டும் உணவாகக் கொண்டு வளரக்கூடிய மீன் இனம் ஓரா மீன்.மனிதனால் மாசுப்பட்ட கடல் நீரால் இன்று எதைஎதையோ உண்வாகக் கொண்டு அழியக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காலத்தின் கொடுமை. அதை ருசித்து சாப்பிட்டவர்களுக்குத்தான் இந்த வேத்னையை உணர முடியும்.

    ReplyDelete
  2. In the food chain,waste of one animals become the food of the other. Therefore our organic waste, though a pollutant in other respect, may not be directly responsible for reduction of various fishes in our sea including your favourite ora and karuth ora.
    The reduction, in my opinion, is due to the discharge of petroleum waste from motor boats.
    Nereis, a marine worm, which I used to get by digging our sea shore, when I was boy, is not available now. How do you explain it.
    Omar

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.