Monday, March 26, 2012

கழிவுநீரால் மாசுப‌டும் க‌ட‌ல்!சீர்ப‌டுத்த பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம்! நக‌ராட்சி தலைவ‌ர் பேட்டி !




கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. சுமார் 50000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.கீழ‌க்க‌ரையில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம் இல்லாத‌தால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மூலமாக‌ சுத்திகரிக்கப்படாமல் சாக்க‌டையாக‌
கடலில் கலக்கின்றன.இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது.

ஏற்கேனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட‌ பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இது போன்ற சாக்கடை கலப்பதால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன் வளம் குறைந்து வருவதாக கடல் வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு நிர்வாகம் கால்வாய் அடைப்பை சரி செய்வது,மருந்து தெளிப்பது உள்ளிட்ட‌ நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்காலிக தீர்வாகவே உள்ளது.


சாக்கடை நீரை சாலையில் ஓடாமலும் ,கடலில் கலப்பதையும் தடுப்பதென்றால் நிர‌ந்த‌ர‌ தீர்வாக கீழக்கரை நகரில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்தினால் ம‌ட்டுமே ச‌ரி செய்ய‌ முடியும். இதன் மூலம் சாக்கடை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விவசாய‌ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .ஆய்வு ப‌ணிக‌ளெல்லாம் முடிக்க‌ப்பட்ட இத்திட்டம் ப‌ல‌ ஆண்டுக‌ளகாக விரைவில் துவ‌ங்கும் என‌ அறிவிப்பு ம‌ட்டுமே உள்ள‌து.ஆண்டுக‌ள் க‌ட‌க்கும் போது இத‌ற்கான‌ திட்ட‌ ம‌தீப்பீடும் அதிக‌ரிக்கும்.என‌வே விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்த‌ முய‌ற்சி செய்து வ‌ருகிறோம். இத்திட்ட‌த்திற்கான ம‌தீப்பீடு ரூ50 கோடி வ‌ரை இருக்கும் என‌ எதிர்பார்க்கிறேன்.உரிய நிதியை பெற்று அடுத்த‌ ஆண்டு இத்த்திட்ட‌ம் துவ‌ங்குவ‌தற்கு வேண்டிய‌ அனைத்து ஏற்பாடுக‌ளையும் செய்து வ‌ருகிறோம்.இத‌ன் மூல‌ம் மேல் கூறியுள்ள பிர‌ச்ச‌னைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ப்ப‌டும் என்றார்

2 comments:

  1. கடலில் சாக்கடை சேர்ந்தால் வர்ரகாலத்தில் பாராதூராமான விளைவுகள் ஆகும் .இந்த சாக்கடையால நம்ம ஊரு கரை ஓரத்தில் கிடைக்கும் ஓர மீன் இனமே அழிஞ்சிருச்சு அதுமட்டுமில்லாம இனிமே மீனே கிடைக்காமேயே போய்ருரதக்கும் சான்ஸ் உள்ளது.எத்தனையோ தலைவர் நம்ம ஊருக்கு வந்துட்டு போய்ட்டாங்க யாரும் இத பத்தி கவலபடலை இன்ஷா அல்லா இந்த தலைவரவது கவனிச்சி இத சரி செய்யனும்.


    மங்காத்தாவின் தங்கச்சி மகன்

    ReplyDelete
  2. கடலில் சாக்கடை சேர்ந்தால் வர்ரகாலத்தில் பாராதூராமான விளைவுகள் ஆகும் .இந்த சாக்கடையால நம்ம ஊரு கரை ஓரத்தில் கிடைக்கும் ஓர மீன் இனமே அழிஞ்சிருச்சு அதுமட்டுமில்லாம இனிமே மீனே கிடைக்காமேயே போய்ருரதக்கும் சான்ஸ் உள்ளது.எத்தனையோ தலைவர் நம்ம ஊருக்கு வந்துட்டு போய்ட்டாங்க யாரும் இத பத்தி கவலபடலை இன்ஷா அல்லா இந்த தலைவரவது கவனிச்சி இத சரி செய்யனும்.



    மங்காத்தாவின் தங்கச்சி மகன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.