Sunday, February 3, 2013

கால‌மானார்(வ‌பாத்) அறிவிப்பு!எண்ண‌ற்ற‌ ஆக்க‌ப்பூர்வ‌மான‌ ச‌முதாய‌ ந‌ல‌ ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ந்த‌ ச‌முதாய‌ புர‌வல‌ரும்,ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ ஷ‌ரிய‌த் கோர்ட்டு த‌லைவ‌ரும்,எழுத்தாள‌ரும்,கீழ‌க்க‌ரை முன்னாள் பேரூராட்சி த‌லைவ‌ருமாகிய‌ கீழ‌க்க‌ரை மேல‌த்தெருவை சேர்ந்த‌ ஹாஜி கே.எஸ்.எம்.எஸ்.சாஹுல் ஹ‌மீது ஆலிம் ஜ‌மாலி அவ‌ர்க‌ள் சென்னையில்
 இன்று காலை வபாத் ஆனார்க‌ள் (கால‌மானார்).

த‌க‌வல்:அஹ‌ம‌து அப்துல் காத‌ர்
ஸ்டெல்லர்,துபாய்

அன்னாரை ப‌ற்றிய‌ சிறு குறிப்பு:-‍தொகுப்பு: அஹ‌ம‌து குத்புதீன் ராஜா.

இறைஞானச் சுடர், இமாம் சதக்கதுல்லாஹ் அப்பா அவர்களின் வழித்தோன்றலான   சுலைமான்  ஆலிம் அவர்களின் மகனாக உதித்த அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது ஆலிம் அவர்கள் பிற‌ந்த‌ தின‌ம் 22 01 1922 சென்னை ஜமாலிய அரபி கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்று இஸ்லாமியப் பணி செய்தார்கள், பெரும் வணிகராக இருந்தததுடன், சென்னை இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையத்தின் தலைவராகவும் , சென்னை சுலைமான் ஆலிம் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து நற்பணி செய்தார்கள்.பன்னூல் ஆசிரியரான அவர்கள், இலங்கையில் 300க்கு அதிகமான பள்ளிகளைக் கட்டி மார்க்கப் பணி செய்த மாகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் "மஙானி" நூலை  மறுபதிப்பு செய்து வெளியிட்டார்கள் .எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக அவர்கள் காலங்களில் கீழக்கரை பேரூராட்சி தலைவராக இருந்து அரும்பணி ஆற்றினார்கள்


இது குறித்து இந்தியன்‌ யூனிய‌ன் முஸ்லீம் லீக் பொருளாள‌ரும் ,ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ருமான‌ ஷாஜ‌ஹான் வெளியிட்டுள்ள‌ இர‌ங்க‌ல் செய்தியில்,

ச‌முதாய‌ ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுவ‌தும் அர்ப‌ணித்து கொண்டு  ச‌முதாய‌ முன்னேற்ற‌த்துக்கு உழைத்து வ‌ந்த‌ அன்னாரின் ம‌றைவு பேரிழ‌ப்பாகும்.முஸ்லீம் லீக் வ‌ள‌ர்ச்சிக்கு துணையான‌ தூண்க‌ளில் ஒருவ‌ரான அன்னாரை இழ‌ந்து வாடும் குடும்ப‌த்தாருக்கும் உற்றார் உற‌வின‌ர்க‌ளுக்கும்  எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌ன் ம‌ன‌ ஆறுத‌லை த‌ர‌ துஆ செய்கிறேன்.அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம் இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்
 .

துபாய் அஹ‌ம‌து தெரு 'அஸ்வான்" ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தியில்...

மிகச் சிறந்த மார்க்க அறிஞராக , சமுதாய சேவைகளில் தன் வாழ்நாளின் இறுதி வரையில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவர்கள். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தை வியாபிக்கச் செய்த மிகச் சிறந்த ஆலிம்களைத் தந்த கீழக்கரை மாநகரில் ஆலிம்கள் இப்போது மிகச் சொற்பமாகி விட்ட இக்கால கட்டத்தில், அத்தகைய  சிறப்பு மிக்க ஆலிமாக விளங்கியவர்கள். இவர்களின் இழப்பு நமது சமுதாயத்திற்கும், நம் ஊருக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.இவர்களின் தூய பணியை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! அன்னாரது மறைவால் வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஸப்ரன் ஜமீலை வழங்கியருள்வானாக!

இவ்வாறு தெரிவித்துள்ள‌ன‌ர்

 

6 comments:

 1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  -கீழை ஜமீல் முஹம்மது.

  ReplyDelete
 2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 3, 2013 at 5:46 PM

  இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஹூன்.

  வார்த்தை எதுவும் இல்லை கண்ணீரைத் தவிர.

  அன்னாரின் மக்பிரத்துக்கு நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம்.

  அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஸ்ப்ரன் ஜமில் என்னும் அழகிய பொறுமையை அல்லாஹு சுபுஹானவுத்தாலா வழங்க பிரார்த்திகின்றோம்..

  ReplyDelete
 3. 156 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

  2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

  ReplyDelete
 4. தமிழகத்தின் பல்வேறு குக் கிராமங்களில் புதிய பள்ளிவாசல்களைக் கட்டவும்,இருக்கிற பள்ளி வாசல்களை உருவாகவும் உழைத்த தலைமகன்களில் அவர்களும் ஒருவர்.அவர்களின் உழைப்பு திருநெல்வேலி,பாளையங் கோட்டை,ஆலங்குளம்,குற்றாலம்,என்று நிலவி நிற்கிறது.அவர்களின் மறைவு சமுதாய மக்களுக்கு பேரிழப்பாகும். இன்னா லில் லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்.நல்லடக்கம் எங்கே ? எப்போது என்கிற விபரம் தர வேண்டுகிறேன்.
  அன்புடன்
  எல்.கே.எஸ்.மீரான்
  மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்.
  திருநெல்வேலி
  9843064664

  ReplyDelete
 5. لَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

  2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

  ReplyDelete
 6. لَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

  2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
  அன்னாரின் மக்பிரத்துக்கு இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம்.
  அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஸ்ப்ரன் ஜமில் என்னும் அழகிய பொறுமையை அல்லாஹு சுபுஹானவுத்தாலா வழங்க பிரார்த்திகின்றோம்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.