Friday, February 15, 2013

கீழ‌க்க‌ரையில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து!க‌வுன்சில‌ர்க‌ள் அதிருப்தி!




 கீழக்கரை பேருந்து நிலையம், வடக்குத் தெரு சி.எஸ்.ஐ சர்ச் சந்திப்பு, தெற்குத் தெரு கட்டாலிம்சா பங்களா சந்திப்பு மற்றும் கஸ்டம்ஸ் ரோடு பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில் என 4 இடங்களில்  ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று ஹைமாஸ் விள‌க்குக‌ள் ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து.ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை தலைவ‌ர் ஹாஜா முகைதீன்,க‌மிஷ‌ன‌ர் முஹ‌ம்ம‌து முகைதீன் உள்ளிட்டோர் ஹைமாஸ் விள‌க்கு ப‌ய‌ன்பாட்டை துவ‌ங்கி வைத்த‌ன‌ர்.

ந‌க‌ராட்சி த‌லைவர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து..
 தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய உயர்கோபுரத்தில் 400 வாட்ஸ் சக்தி கொண்ட 16 ஒளி வெள்ள (ஹைமாஸ்) விளக்குகள் இருக்கும். தினமும் மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 16 விளக்குகளும் எரியும். இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை திசைக்கொன்றாக, அவற்றுள் 8 விளக்குகள் மட்டும் எரியும். இவையனைத்தும் தானியங்கி முறையில் (ஆட்டோமெடிக்) செயல்படும்  என்றார்.



இது குறித்து 17வ‌து வார்டு கவுன்சில‌ர் ஆனா மூனா கூறிய‌தாவ‌து,

என‌து வார்டுக்கு உட்ப‌ட்ட‌ தெற்குதெரு ப‌குதியில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ளது மிகுந்த‌ ம‌கிழ்ச்சி அதே நேர‌த்தில் அப்ப‌குதி க‌வுன்சில‌ர் என்ற‌ முறையில் இந்நிக‌ழ்வு குறித்து எவ்வித‌ த‌க‌வ‌லும் என‌க்கு த‌ராத‌து மிகுந்த‌ ம‌ன‌வ‌ருத்த‌த்தை த‌ருகிற‌து என்றார்.

18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவது...
17வது வார்டுக்கு உட்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சியில் அப்ப‌குதியின் அதிமுக‌ க‌வுன்சில‌ர் முகைதீன் அப்துல் காத‌ரை அழைக்க‌வில்லை என்ப‌து க‌ண்டிக்க‌த‌க்க‌து அப்ப‌குதியின் அருகே உள்ள‌ வார்டு க‌வுன்சில‌ரான‌ என்னையும் அழைக்கவில்லை.
ஏற்கென‌வெ இந்த‌ விள‌க்குக‌ள் அனைத்து த‌ர‌ம‌ற்ற‌வை என‌ வ‌ழ‌க்கு தொட‌ர்ந்துள்ளேன்.ஒருவேளை அத‌னால் என்னை அழைக்காம‌ல் இருக்கலாம் ஆனால் ம‌ற்ற‌ க‌வுன்சில‌ர்களையும் ம‌திக்காம‌ல் அழைக்காம‌ல் அவச‌ர‌ க‌தியில் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து எங்கே நீதிம‌ன்ற‌த்தில் ஸ்டே கிடைத்து விடுமோ ப‌ய‌மும் மேலும் த‌டை வ‌ந்து விட்டால் மேற்க‌ண்ட‌ த‌ர‌ம் அற்ற‌ விளக்குக‌ளை ச‌ப்ளை செய்ய‌த‌ ஒப்ப‌ந்த‌ரார் கமிஷ‌ன் ப‌ண‌த்தை திருப்பி கேட்டு விடுவார் என்ற‌ என்ற‌ அச்ச‌மே கார‌ண‌ம் என‌ நினைக்க‌ தோன்றுகிற‌து.
இறைவன் அருளால் த‌ர‌ம‌ற்ற‌ விள‌க்குக‌ள் என்று நிரூபித்து நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் நீதியை நிலை நாட்டுவேன் என்றார்.

முன்னாள் க‌வுன்சில‌ர் ஹ‌மீது கான் கூறியதாவ‌து,

சென்ற‌ ந‌க‌ராட்சி தலைவ‌ர் ப‌சீர் இது போன்ற‌ நிக‌ழ்வுக்கு எவ்வ‌ள‌வு க‌ருத்து வேறுபாடு இருந்தாலும் அந்த‌ந்த‌ வார்டு க‌வுன்சில‌ர்க‌ளை த‌வ‌றாம‌ல் அழைப்பார் அவ‌ரின் இந்த‌ ந‌ல்ல‌ முன்னுதார‌ண‌த்தை இவ‌ர்க‌ள் ஏன் பின்ப‌ற்ற‌வில்லை என்றார்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 15, 2013 at 6:45 PM

    புதியதாக அமைக்கப்பட்ட நான்கு ஹைமாஸ் விளக்குகளும் தானியங்கி முறையில் செயல்பட துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மிக்க சந்தோஷம். எத்தனை நாளைக்கு இவைகள் எரியும்.ஏற்கனவே இவைகள் தரமற்ற மின்சாதனங்கள் என புகார் வேறே எழுந்துள்ளது.

    அது போக, ஏற்கனவே நகரில் செயலபாட்டிற்கு கொண்டு வரப்பட்டப்பட்டதில் சிலதுகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை என்பது நகராட்சி நிர்வாகம் அறியுமா? அதை சீர்செய்ய ராகு காலம் எப்போது கடக்கும்?

    மக்கள் வரிப் பணத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக செய்யப்பட்ட நலத் திட்டங்களை மக்கள் அனுபவிக்கும் வகையில் செயல் படுத்துவது நிர்வாக்ததின் தலையாய கடமை என்பது தங்களுக்கு புரியவில்லையா?

    நகர் முழுமைக்கும் தெரு விளக்குகளை (ஹைமாஸ் உடபட்) பராமரிக்க ஒரே ஒரு பணியாளர் மட்டும் தான் உள்ளாராமே. இது எப்படி சாத்தியப்படும்? இதன் காரணமாக நகரை சுற்றி அனேக தெரு விளக்குகள் எரிவதில்லை. புகார் செய்தாலும் சீர் செய்ய இதன் காரணமாக மாதக்கணக்கில் ஆகிறது.அந்தோ பரிதாபம். கீழக்கரை நகராட்சி கீழதரமான நக்ராட்சியாக மிளிர்கிறது.. வாழ்க இப்படியே வளர்க.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.