Monday, February 4, 2013

கீழ‌க்க‌ரையில் +2 மாணவ‌,மாண‌விய‌ர்க‌ளுக்கான‌ வ‌ழிகாட்டி "வெற்றி ந‌மதே" க‌ருத்த‌ர‌ங்க‌ம்!

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டிக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் யூசுப், இயக்குநர் ஹபீப்முஹம்மது, பொறியியல் கல்லூரி முதல்வர் முஹம்மதுஜஹாபர், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர்  செல்வராஜ், துணை முதல்வர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மின்னணுவியல் துறைத் தலைவர் சேகுசகுபான்பாதுசா, நுண்ணுயிரியல் துறை  விரிவுரையாளர் முஹம்மது இபுராஹீம் ஆகியோர் கல்லூரி பற்றிய தகவல்களைக் கூறினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளையான்குடி ஜாகீர்உசேன் கல்லூரி இணை பேராசிரியர், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் முழுமையாக வெற்றி பெறுவதற்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மேலாண்மைத் துறைத் தலைவர் நாசர் நன்றி கூறினார். இதில் ஏராளமான பிளஸ் 2 மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


 

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.