கீழக்கரை நகராட்சி குப்பை கிடங்கில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை தேவைபடுபவர்கள் நகராட்சியை அணுகி எவ்வித கட்டணமுமின்றி எடுத்து செல்லலாம்.மேலும் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆய்வு பணி முடிந்தவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு முறையும் கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறும் போது ஒரு சில கவுன்சிலர்கள் தங்களின் வார்டு நலனுக்கு தேவையான விஷயங்களை பேசாமல் கூட்டத்தை அமைதியாக நடைபெறக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் நடந்து கொள்கின்றனர்.
சென்ற கூட்டத்தில் நகராட்சி கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.இனி ஒவ்வொரு முறையும் கூட்ட நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும்.மேலும் கூட்டத்தின் வீடியோ பதிவுகள் கீழக்கரை நகரில் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொதுமக்கள் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
வரவேற்க்கத்தக்க யோசனை, ஒளிபரப்பும் நேரத்தை முன்னறிவிப்பு செய்து ஒளிபரப்பு பண்ணுங்க. நேரலை கூடச்செய்யலாம், ஆள்மாறாட்டம் / வெட்டி ஓட்டிட்டாங்க என்கிற புகார்கள் வராது.... சமயத்துல சப்தம் இல்லாத ஊமைப் படம் காண்பிக்காமல் இருந்தால் சரி....
ReplyDeleteவரவேற்க வேண்டிய நடவடிக்கை.அத்துடன் தங்கள் வளைத் தளத்திலும், பேஸ் புக்கிலும் அதை காணக் கூடிய வசதியையும் செய்து தாருங்கள்
ReplyDeleteஇதனால் பொது மக்கள் தங்களுக்கு வசதிப் பட்ட நேரத்தில் காணோளியை காண உதவியாக இருக்கும்
ReplyDeleteNalla visayam appuram unga husband alsanai illama taniyaka mudiuedungha madam
ReplyDelete