கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது,
நேற்றைய தினம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு கமிஷனர் முகம்மது முகைதீனை சந்திக்க கவுன்சிலர்கள் நான்(ஜெயபிரகாஷ்),அன்வர் அலி,ஹாஜா,சித்தீக்,ரபியுதீன் உள்ளிட்ட சென்றோம் அப்போது துணை சேர்மனும் உடன் இருந்தார்.
அப்போது கமிஷனர் முகம்மது முகைதீனிடம்
நகராட்சி நிர்வாகத்தில் டம்பர் பிளாஸர் பழுது நீக்கம் என்ற பெயரில் 12ஆயிரம் செலவு செய்து விட்டு ரூ 50 ஆயிரத்திற்க்கு மேல் பில் பெறப்பட்டுள்ளது.இதற்காக கீழக்கரையில் உள்ள கடை ஒன்றில் போலியான பில் பெறப்பட்டுள்ளது.இதற்க்கு நடவடிக்கை கோரியும் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை முறைகேடாக விற்கப்பட்டுள்ளது குறித்தும்
மேலும் சேர்மன் கணவர் ரிஸ்வான் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவரவர் தரப்பில் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்
மேலும் அவர் கூறியதாவது,
சென்ற வருடம் கீழக்கரை நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ 2கோடியில்
ரூ1 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் பைப்கள் அமைக்கும் திட்டத்தில் தொடங்கப்ப பணிகள் முழுமை பெறாமல்(1000 மீட்டர் பாக்கியுள்ளது) 75 சதவீதம் பணம் ஒப்பந்தராருக்கு தரப்பட்டுள்ளது ஏன்?
ரூ 50 லட்சத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியில் 15 லட்சத்திற்கு பில் தரப்பட்டுள்ளது.மீதி பணிகள் இதுவரை நிறைவு பெறாமல் இருப்பது ஏன் ?
ரூ 50 லட்சத்தில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டு இன்று வரை விளக்குகள் செயல்படவில்லை.
இப்படியாக கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது.
இதற்கெல்லாம் சம்பந்தபட்டவர்கள் கீழக்கரை மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
அரசின் "சொர்ணா ஜெயந்தி" திட்டத்தில் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் உதவி திட்டத்தில் கீழக்கரையில் எத்தனை பேருக்கு கடன் வழங்க பரிந்துரைக்கபட்டுள்ளது என்பதை சேர்மன் ராவியத்துல் காதரியா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் .
இத்திட்டத்தில் கடன் பெறுபவர்கள் ரூ50,000 பெற்றால் ரூ12 500 மானிய அடிப்படையில் திருப்பி செலுத்த தேவையில்லை அது போன்று முழுமையாக கடனை திருப்பி செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பது குறிப்பிட விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது
இதையெல்லாம் தட்டிகேட்டதால் என்னை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளனர் இது குறித்து
நியாயம் கேட்க நீதிமன்றம் சென்றுள்ளேன்.
கீழக்கரையில் 25 துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசால் பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இது வரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.இந்த நிதிலிருந்து சேர்மன் தரப்பு முறைகேடாக கமிஷன் வாங்குவதற்கு முயற்சி எடுப்பதாகவும் அதனால்தான் தாமதம் என செய்திகள் நமக்கு கிடைத்துள்ளது.
மேலும் நகராட்சியின் குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் புகார் தெரிவித்ததிலிருந்து கீழக்கரையின் நிர்வாக சீர்கேடுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
நான் தொடர்ந்து நியாயம் கேட்பதால் இவனுக்கு பிழைக்க தெரியவில்லை என்னை குறை சொல்கின்றனர்.ஒரு பைசா ஹரமான பணம் எனக்கு தேவையில்லை.நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்றார்.
கத்தரிக்காய் முற்றி விட்டது. கடைக்கு வர ஆரம்பித்து விட்ட்து
ReplyDeleteசீச்சீ...என்ன ஒரு கீழ் தரமான நிர்வாகம் நடக்கிறது கீழக்கரை நகராட்சியில்.
கடந்த ஆண்டு நக்ராட்சி அலுவலத்தில் குத்பா கமிட்டி மற்றும் அனைத்து ஜ்மாத், சமூக நல அமைபுகளை அடங்கிய ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது ( 20 செப்டம்பர் 2012 வாக்கில்) அதில் பரிந்துரை செய்யப்பட்டவைகளில் கீழ் கண்ட ஒன்றுமாகும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்று அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கருத்துக்கள் ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்ளப்பட்டது - கீழக்கரை டைம்ஸ் நாள் 20 செப்டம்பர் 2012.
அது போன்ற ஒரு கூட்டத்தை உடனடியாக கூட்டி இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் மக்கள் நல பணிகள் அனைத்தும் பாழாகி விடும்.