Monday, February 25, 2013

கீழ‌க்க‌ரையில் 65 க‌ல்லூரிக‌ள் ப‌ங்கேற்ற‌ தேசிய க‌ருத்த‌ர‌ங்க‌ம்!



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைசார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, காலிகட் தேசிய தொழில்நுட்ப கழகம் முன்னாள் டீன் வெங்கடரமணி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சேக்அரபாத் தொகுத்து வழங்கினார்.
துறைத்தலைவர் பீர்ஒலி வரவேற்றார். இதில் காலிகட் தேசிய தொழில்நுட்ப கழகம் முன்னாள் டீன் வெங்கடரமணி பேசியதாவது:
பல்வேறு துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் துறை சிறந்து விளங்க பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவின் மாபெரும் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என பேசினார்.
கருத்தரங்கில் 65 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 7 பல்கலைக்கழக முதுநிலை மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். இதை எலலுசியம் பிராஜக்ட் மேலாளர் கார்த்தியாயினி மற்றும் ஸ்ரீவித்யா கட்டுரைகளை ஆய்வு செய்து தேர்வு செய்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. துறைத்துணைத்தலைவர் சியாமளா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.