இது கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செய்யது இப்ராகிம் கூறுகையில்,
கீழக்கரையில் பல்வேறு இடங்களில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.இவற்றில் சில பகுதிகளில் ஒரு சிலர் கட்டிட கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி விட்டு அகற்றாமல் விட்டு விடுகின்றனர்.மேலும் சிலர் குப்பைகளையும் சாலையில் வீசி செல்வதால் அப்பகுதி குப்பை மேடாக மாறும் சூழ்நிலை ஏற்படுகிறது.இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிகுழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்படும்.எனவே சம்பந்தபட்டவர்கள் சாலையில் கொட்டிய கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.அதுபோன்று குப்பைகள் சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும் இதன் மூலம் அப்பகுதி சுகாதார கேடாக மாறாமல் பாதுகாக்க முடியும்.நம் பகுதியை சுகாதாரமாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்
இது குறித்து கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது,
குப்பைகளை சாலைகளில் வீசக்கூடாது.வீடு வீடாக வரும் பணியாளர்களிடம் குப்பையை கொடுக்க வேண்டும் அதே போன்று கீழக்கரை நகரில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும்.தவறும் பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.