Monday, February 25, 2013

சமூக‌ இணைய‌த‌ள‌ம் மூல‌ம் தொந்த‌ர‌வு!பெண்க‌ள் புகார் செய்ய‌லாம்!தாசிம்பீவி க‌ல்லூரி நிக‌ழ்ச்சியில் காவ‌ல்துறை அதிகாரி அறிவுரை



கீழ‌க்க‌ரை தாசிம் பீவி க‌ல்லூரியில் இணைய‌ பாதுகாப்பு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியில் மாண‌வி பாத்திமா ஜீமானா கிராத் ஒதினார். தாசிம் பீவி க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா த‌லைமை வ‌கித்தார்.பேராசிரியை கெள‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

 ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி உமையாள் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.மேலும் ச‌மூக‌ இணைய‌த‌ள‌ குற்ற‌ம் ம‌ற்றும் தொந்த‌ர‌வுக‌ளுக்கு கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ள் umayalsn2009@gmail.com  என்ற‌ ஈமெயில் முக‌வ‌ரியிலும் 94432 01233 என்ற‌ எண்ணிலும் தொட‌ர்பு கொள்ள‌லாம் புகார் அளிப்ப‌வ‌ரின் விப‌ர‌ங்க‌ள் வெளியிட‌ப்ப‌ட‌மாட்டாது என்றார்.

தொட‌ர்ந்து ம‌துரை ம‌ண்ட‌ல‌த்தின் வேலைவாய்ப்பு மற்றும் ப‌யிற்சி உத‌வி இய‌க்குந‌ர் பீர் முக‌ம்ம‌து,பேராசிரிய‌ர் செல்வ‌குமார்,கிரிசில் நிறுவ‌ன‌த்தின் த‌க‌வ‌ல் பாதுகாப்பு துறையின் இணை இய‌க்குநார் அமீத் பிரகாஷ்,பேராசிரிய‌ர் சதீஷ் குமார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு  இணைய பாதுகாப்பு குறித்து இணைய‌ உல‌கில் ஏற்ப‌ட்டுள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்தும் அவ‌ற்றை எதிர்கொள்வ‌து குறித்தும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை எடுத்துரைத்த‌ன‌ர்.உத‌வி பேராசிரியை ஹ‌தீஜ‌த் ஷுல்பா ந‌ன்றி கூறினார்

இர‌ண்டு ப‌குதியாக‌ தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் மாண‌வி முபீனா கிராஅத் ஓதினார்.உத‌வி பேராசிரியை தில்லேஸ்வ‌ரி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.துணை முத‌ல்வ‌ர் நாதிரா க‌மால் அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.தொட‌ர்ச்சியாக‌ ப‌ரிசு அளிப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.உத‌வி பேராசிரியை அப்ரின் சாரா ந‌ன்றி கூறினார்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 25, 2013 at 1:41 PM

    இத்துடன் கீழக்கரை பி.எஸ்.என்.எல் அலுவலத்திலும் சந்தாதாரர்களுக்கு காலர் ஐடி வசதியையும் செய்வார்களேயானால் சைபர் கிரைம் குற்றங்களை கண்டு பிடிக்க பேருதவியாக இருக்கும்.

    இப்போது இந்த வசதியை மனு செய்பவர்களுக்கு கொடுப்பதில்லை. கேட்டால் சம்பந்தபட்ட பொறியாளர் கிடையாது என்கிறார்கள்.

    காலர் ஐடி வசதி கிடைக்குமானால் நடு இரவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு வரும் அழைப்புகளை கண்டு பிடிக்க பேருதவியாக இருக்கும்.மானம் கெட்ட ரோமியோக் களுக்கும் எச்சரிகையாக அமையும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.