படம்:சாலிஹ் ஹுசைன்
கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் ஜன.30ல் நடந்தது. வளர்ச்சி பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். கூட்டம் முடிந்ததும் 18வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் முகைதீன் இபுராகிமை 2கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சஸ்பெண்ட் செய்தார். இதுதொடர்பாக நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் முகைதீன் இபுராகிம் மனு அளித்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது:
இரு மாத கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத வகையில் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தலைவர் ராவியத்துல் கதரியா அறிவித்திருப்பது மனம், உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சஸ்பெண்ட் உத்தரவை எழுத்து பூர்வமாக தர வேண்டும் என மனு கொடுத்தும் இன்று வரை தரவில்லை. சஸ்பெண்ட் செய்ய அதிகாரமில்லாத நிலையில் என்னை சஸ்பெண்ட் செய்த நகராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழக்கரை சேர்மன் வலைதளத்தில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியிருப்பதாவது,
கடந்த 30 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட கடந்த மாத கூட்டத்தினை முதலில் தொடங்கும் பொழுதே 12,13,14,18,19 மற்றும் 20 ஆவது வார்டு உறுப்பினர்கள் 6 பேர் வெளி நடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர். பின்பு ஜனவரி மாத கூட்டத்தினை தொடங்கிய போது மீண்டும் கூட்டத்தில வந்து இனைந்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே “ சேர்களை கீழே தள்ளிவிட்டும், தீர்மான பேப்பர்களை வீசி எறிந்தும் கூட்டத்தினை நடக்கவிடாமல் குழப்பம் விளைவித்தார். மக்கள் கடமை ஆற்ற்விடாமல் தடுத்த அவரை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினேன். அதனை தொடர்ந்து ” என்னை வெளியேற்ற உணக்கு அதிகாரம் இல்லை என்றும் , கை யை நீட்டி அவதூறாக ஒருமையில் பேசியதாலும் அவரை எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பென்ட் செய்தேன்.
மேலும் இந்த உறுப்பினர் எனக்கும், நகர்மன்றத்த்துக்கும், இந்த ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே வெளி நபர்கள் சிலருடனும், சில பொறுப்பற்ற உறுப்பினர்களுடனும் இனைந்து உள் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இதனை இத்துடன் இவர் நிறுத்திக் கொண்டு மக்கள் பணி ஆற்ற வேண்டும் , மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இவர் என்மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக தெரிய வருகிறது , நான் இந்த விஷயத்தில் அந்த உறுப்பினரை சஸ்பெண்ட் செய்வதற்கு பின்பற்றிய நடைமுறை, எடுக்கப்பட்ட முடிவானது, சட்டத்துக்கும் , நகர்மன்ற விதிகளுக்கும் உட்பட்டே எடுக்கப்பட்டது. என்றார்.
மதுரை மண்டல இயக்குநர் குபேந்திரன் கூறுகையில்,
கவுன்சிலரை முன்கூட்டியே சஸ்பெண்ட் செய்ய நகராட்சி தலைவருக்கு அதிகாரம் இல்லை. கூட்டத்திலிருந்து கவுன்சிலரை வெளியேற்ற அதிகாரம் உள்ளது, என்றார்.
முகைதீன் இபுரகிமுக்கு இதே வேலையாபோச்சி ஏன் அவறுக்கு ஓட்டு போட்டோம் என்ற கவலையில் நாங்கள் இறுக்குறோம் இது வரை எங்கள் வார்டுக்கு உறுப்படிய எதுவும் செய்வில்லை இந்த பெயர் விரும்பியை அடுத்த தேர்தலில் கட்டயம் புறக்கனிப்பேம்
ReplyDeleteevar orutharavathu thanathu vard naalanukka kasdam paduraru sonthosam pada vediya visayam, enka vard 5 ikku vanthu paruka 5 number vardu evalau kubaium koolamumaka irukkun derium, pothu idathil kaliu neer koda padukirathu , kudi iruppukal mathil kollakadu ( kaliu semippu kidakaka irukku) ethu enka vardu kounsilarin kavana kuraive karanam,
ReplyDelete