அமீரகத்தில் வாழும், தென் மாவட்ட மக்களின், நேரம், பணம் ஆகியவைகளை மிச்சப்படுத்துவது உட்பட, பல்வேறு வகையில் உதவிகரமான, துபாய்-மதுரை நேரடி விமான சேவையை, அமீரகத்தைச் சார்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஈடியே நிர்வாக இயக்குநர் தலைமை அலுவலக மேலாளர், அரிகேசவநல்லூர் s.s.மீரான், மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் இல்ல நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்டம் வருகை தந்த அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து துபாய் – மதுரை நேரடி விமான சேவை தொடர்பான பணிகளை துரிதப்படுத்த வேண்டி கோரிக்கை அளித்தார்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி, இது தொடர்பாக சென்ற ஆண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டிற்கு, அமீரகம் வந்த போது கொடுக்கப்பட்ட மனுவை நினைவு கூர்ந்ததுடன், இது சம்பந்தமாக மத்திய விமானத்துறை அமைச்சர் அஜீத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மேலும் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் புதிய வழித்தடங்கள் பட்டியலில் துபாய்-மதுரை விமான சேவையை இணைக்க, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சருடன் பேசுவதாகவும் உறுதியளித்தார்.
இது தொடர்பாக s.s.மீரான் , துபாய் – மதுரை நேரடி விமானம் சேவை துவங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்புக்கு அமீரகத்தின் அனைத்து அமைப்புகள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதோடு, இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த மத்திய அமைச்சருடனான சந்திப்பின் போது நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.