Monday, February 11, 2013

கீழ‌க்க‌ரையில் 2நாள் மீலாத் நிக‌ழ்ச்சிக‌ள் நிறைவு!








கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைந்து பழைய குத்பா பள்ளி பொறுப்பேற்று நடத்திய மாபெரும் மீலாது விழா மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.
முதல்நாள் சென்னை மஸ்ஜித் அஸ்ரப் தலைவர் ச.மு.மஜீது, இரண்டாம் நாள் பழையகுத்பா பள்ளி முன்னாள் தலைவர் முகம்மது சதக்கு தம்பி தலைமை வகித்தனர்.
 
பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், இரண்டாம் நாள் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, கீழக்கரை டவுன்காஜி காதர்பக்ஷ் ஹூசைன் ஸித்தீக்கி, பழையகுத்பா பள்ளி துணைத் தலைவர் கிதிர் முகம்மது முன்னிலை வகித்தனர், பழைய குத்பா பள்ளி செயலாளர் முகம்மது இஸ்மாயில் வரவேற்றார்.
 
 இதில் பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர்அலி ஆலிம் கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்.
 
ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன் ஆலிம்ஜமாலி, நெல்லை பேட்டை ஹஸனத்துல் ஜாரியத் அரபி கல்லூரி முதல்வர் டி.ஜே.எம். ஸலாஹூதீன், நடுத்தெரு ஜமாஅத் கத்தீபு முகம்மது முஸ்தபாஆலிம், தெற்குத்தெரு ஜமாஅத் இமாம் அஹமது அமானிஆலிம், கிழக்குத்தெரு ஜமாஅத் கத்தீப் ஹூமாயின் கபீர்ஆலிம், சென்னை மஸ்ஜித்துல் அஷ்ரப், தலைமை இமாம் அபவில்ஹசன் பாஸி, இஸ்லாமியா தக்வா மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவனர் பெரியார்தாசன் மற்றும் முகம்மது ஜாபீர்அலி, கலீல் ரஹ்மான் ஆலிம் உட்பட ஏராளமானோர் குறித்து பேசினர்.
 
செயற்குழு உறுப்பினர் செய்யது சித்தீக் ம‌ற்றும் லெப்பை த‌ம்பி தொகுத்து வழங்கினர்.
 
பழைய குத்பா பள்ளி செற்குழு உறுப்பினர் சீனி மதார்சாகிபு நன்றி கூறினார். இமாம் முகம்மது சதக்கத்துல்லா உலக ஒற்றுமைக்காகவும் நலனிற்காகவும் துஆ செய்தார். ஏராளமான உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.