Friday, February 15, 2013

சைக்கிளில் வ‌ந்த‌ சைலேந்திர‌பாபுவுக்கு(ஏடிஜிபி) கீழ‌க்க‌ரையில் வ‌ர‌வேற்பு!



தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.க‌ன்னியாகும‌ரி செல்லும் வ‌ழியில் கீழ‌க்கரை எல்லையில் அவ‌ருக்கு அவ‌ர‌து குழுவின‌ருக்கும் வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் த‌லைமையில் க‌வுன்சில‌ர்க‌ள் அன்வ‌ர் அலி, த‌ங்க‌ராஜ்,சாஹுல் ஹ‌மீது,முகைதீன் இப்ராகிம்  முன்னாள் க‌வுன்சில‌ர் வேலுச்சாமி ம‌ற்றும் காவ‌ல்துறை அதிகாரிக‌ள் வ‌ர‌வேற்பில் ப‌ங்கேற்ற‌ன‌ர்

சைக்கிள் சுற்றுப‌யண‌ம் குறித்து அவ‌ர் கூறிய‌தாவ‌து,

சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் சுமார் 591 மீனவ கிராமங்கள் உள்ளது. அனைத்து மீனவ கிராம மக்களையும் எங்கள் பயணத்தின் போது சந்தித்து, கடலோர மீனவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.இது வ‌ரை 650 கிலோமீட்ட‌ர் தூர‌ம் சைக்கிள் ப‌யண‌ம் மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், கடலில்  இயற்கை சீற்றங்கள், படகு கவிழ்தல் போன்ற ஆபத்து மீனவர்களுக்கு ஏற்பட்டால், இந்தியா முழுவதும் டோல் ப்ரி 1093 என்ற இலவச எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த எண்ணில் மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். எங்களிடம், 24 ஸ்பீடு போட், 14 அதிநவீன படகு, மேலும் தேவைப‌டும் பட்ச‌த்தில் இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளது மீனவர்கள் தொடர்பு கொண்டால் சில நிமிடங்களில் உதவிக்கு சென்றுவிடுவோம். இதுவரை 150 மீனவர்களையும், 400 படகுகனையும் மீட்டு உள்ளோம்.

மேற்கண்ட தகவலை மீனவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், இந்திய கடலோர காவல் படை கமாண்டர் பிரேம்குமார் மற்றும் தமிழக காவலர்கள் 30 பேரும், இந்திய கடலோர காவலர்கள் 10 பேரும் என 40 பேர் மேற்கொண்டுள்ளோம்.எங்கள் குழுவில் மருத்துவக்குழுவும் உள்ளது. நாங்கள் வரும் நேரத்தில் மீனவ கிராமங்களில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதையும் வழங்கி வருகிறோம் என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.