Saturday, February 2, 2013

ரூ5 கோடி 50ல‌ட்ச‌ம் ஒதுக்கீடு!கீழ‌க்க‌ரையில் 80ல‌ட்ச‌த்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க‌ப்ப‌ட்ட‌து!




கீழ‌க்க‌ரை துணை மின் நிலைய‌த்தில் ஏற்கென‌வே 10மெகாவாட் திற‌ன் கொண்ட‌ டிரான்ஸ்பார்ம‌ர் ப‌ய‌ன்பாட்டில் இருந்து வ‌ந்த‌து இந்நிலையில் கீழ‌க்க‌ரையில் மின் ப‌ய‌ன்பாடு அதிக‌ரித்து வ‌ருவ‌தால் கூடுத‌லாக‌ புதிய‌ டிரான்ஸ்பார்மர்  வைக்க‌ வேண்டும் என‌ பல்வேறு அமைப்புக‌ள் மின் துறைக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌து.இக்கோரிக்கையை ஏற்று கீழக்கரை துணை மின் நிலையத்தில் 10 எம்.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த‌ப்ப‌ட்டு மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராமன் துவக்கி வைத்தார்.

 மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராமன் கூறியதாவது:
கீழ‌க்க‌ரை துணை மின் நிலைய‌த்தின் விரிவாக்க‌ ப‌ணிக்க‌காக‌  ரூ 5 கோடியே 50 ல‌ட்ச‌ம் ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ளது.இந்த‌ நிதியில்தான் ரூ80ல‌ட்ச‌ம் செல‌விலான‌ த‌ற்போது புதிய‌ டிராண்பார்ம‌ர் நிறுவ‌ப்ப‌ட்டுள்ள‌து மேலும் புதிய திட்டத்தில் கீழ‌க்க‌ரையில் 60 இடங்களில் 40 கே.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், 600க்கும் அதிகமான மின் கம்பங்கள் மாற்றப்பட்டு புதிய வயர்கள் பொருத்தப்படும். கடலோர பகுதிகளில் பூமிக்கடியில் மின்வயர் அமைப்பதற்காக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கீழ‌க்க‌ரையில் ம‌க்க‌ளின் கோரிக்கையை ஏற்று மின் க‌ட்ட‌ண‌ வ‌சூல் மைய‌ம் புதிய‌ ப‌ஸ் நிலைய‌த்திற்கு மாற்றுவ‌த‌ற்கு நேற்று ந‌க‌ராட்சியில் இருந்து எழுத்து மூல‌ம் தக‌வ‌ல் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.இதை ப‌ரிசீல‌னை செய்து புதிய‌ ப‌ஸ் நிலைய‌த்தில் க‌ட்ட‌ண‌ வ‌சூல் மைய‌ம் அமைக்க‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌டும்.
மேலும் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் வீடு க‌ட்டுவ‌த‌ற்கு அப்ரூவ் கொடுக்கும் போது நில‌த்த‌ருகே மின் க‌ம்ப‌ங்க‌ள் உள்ளிட்ட‌வைக‌ளை க‌ருத்தில் கொண்டு அத‌ற்கேற்ப‌ ப‌ளான் அப்ரூவ் செய்ய் வேண்டும்.ஏனென்றால் கீழ‌க்க‌ரையில் சில‌ இட‌ங்க‌ளில் வீடு க‌ட்டும்போது மின் க‌ம்ப‌த்தை வீட்டு சிலாப்பிற்குள் வைத்து க‌ட்டி விடுகின்ற‌ன‌ர் இத‌னால் விப‌த்துக்க‌ள் ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌து.மாவட்டத்தில் மின்வாரியத்தில் 60 சதவீத ஊழியர் பற்றாக்குறை உள்ளது.இதை அர‌சு தீர்த்து வைக்கும் என்றார்.

இந்நிக‌ழ்ச்சியில் ராம‌நாத‌புர‌ம் செய‌ற்பொறியாள‌ர் யோக‌நாத‌ன் ,உத‌வி செய‌ற்பொறியாள‌ர் க‌ங்காத‌ர‌ன்,கீழ‌க்க‌ரை உத‌வி செய‌ற்பொறியாள‌ர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.இதில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,தில்லையேந்த‌ ஊராட்சி முனிய‌ம்மாள் செல்வ‌குமார்,கீழ‌க்க‌ரை ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் சேவை இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் அமானுல்லா,செய‌லாள‌ர் த‌ங்க‌ம் ராத‌கிருஸ்ண‌ன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 2, 2013 at 8:56 PM

    நகரில் அடிக்கடி ஹைவோல்டேஜ் இணப்புகள் ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதாகின்றன.இப்போது அதிக திறன் உள்ள டிரான்ஸ்பர்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் மின் சாதன பழுதுகள் அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.இதையும் மனதில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்க வேண்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.