கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
கீழக்கரை நகராட்சியில் கடந்த 30/01/13 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகர் வளர்ச்சி பணிகளில் நடைபெற்று வரும் மெகா ஊழல்களை எதிர்த்து,கீழை மக்களின் நலனுக்காக நான் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் குரல் எழுப்பியதற்காக மரியாதைக்குறிய சேர்மன் அவர்கள் ஒருமையில் நான் பேசியதாக கூறி என்னை இரண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான் மனு தாக்கல் செய்தேன் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் கீழக்கரை நகராட்சி தலைவியின் சஸ்பெண்ட் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்கள்.
எனக்கு நீதி கிடைப்பதற்காக துஆ செய்த நகரவாசிகள் அனைவருக்கும் நன்றி அதேபோல் 20வது வார்டு கவுன்சிலர் எனது பாசமிகு நண்பர் ஹாஜா நஜிமுதீன்,வழக்கறிஞர்களான ஜின்னா,அலாவுதீன் அவர்களுக்கும்,மக்கள் நல பாதுகாப்பு கழகத்துக்கும்,உணமையை வெளிச்சம் போட்டு காட்டும் பத்திரிக்கையாளர்களுக்கும்,கீழக்கரைடைம்ஸ் இணைய தள பக்கத்திற்கும்,வெளிநாடு வாழ் ஆதரவாளர்களுக்கும் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.