Wednesday, February 13, 2013

கீழ‌க்கரையில் அர‌சு விளையாட்டு ப‌யிற்சி மையம் அமைக்க‌ கோரிக்கை!

.



கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்று வ‌ட்டார‌ கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்தியில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் கீழ‌க்க‌ரையில் அர‌சு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என இளைஞ‌ர்க‌ள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அரசு பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. மாவட்டந்தோறும் விளையாட்டு அரங்கம், விடுதிகள் அமைத்து வெயிட் லிப்ட், பவர் லிப்ட், பெஞ்ச் பிரஷ், ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், தடகளம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியின்போது வட்டார அளவில் மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் தாலுகா வாரியாக ஸ்டேடியம் துவக்கப்பட்டன. ஒருசில இடங்களில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணியும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 கீழ‌க்க‌ரை  சுற்றியுள்ள‌ கிராம‌ங்க‌ளின் மத்திய பகுதியாக விளங்கி வருகிறது. எனவே சுற்று வட்டார கிராம மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கீழ‌க்க‌ரையில் அர‌சுக்கு சொந்தமான‌ இட‌ங்க‌ளை தேர்வு செய்து ‌விளையாட்டு பயிற்சி அரங்கம் அமைத்து மாணவர்கள் பயிற்சி பெற ஆணையம் சார்பில் உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வமுள்ளர்வ‌ரிக‌ளின் விருப்பமாக உள்ளது




அதே போன்று கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு விளையாட்டு குழுக்கள் உள்ள‌ன‌ இதிலிருந்து சிறந்த வீரர்களை உருவாக்க இங்கு கிரிக்கெட்,கைப்ப‌ந்து,கூடைப்ப‌ந்து உள்ளிட்ட‌ விளையாட்டுக்களுக்கு அர‌சு பயிற்சி மையம் அமைத்தால் இப்ப‌குதியில் மிக‌ சிற‌ந்த‌ விளையாட்டு வீர‌க‌ளை உருவாக்க‌ முடியும்.
கீழ‌க்க‌ரையில் இளைஞர்கள் ஏராளமானோர் கிரிக்கெட்,கைப்ப‌ந்து,கூடைப்ப‌ந்து  விளையா்ட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிரிக்கெட்,கைப்ப‌ந்து,கூடைப்ப‌ந்து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு  தொடர்ந்து  விளையாடி வருகின்றனர்.
மார்னிங் ஸ்டார்,சவுத் ஸ்டா்ர் என்று ஐபிஎல் ரேஞ்சுக்கு தங்களி்ன் அணிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.இந்த அணிகளில் அதி வேகத்தில் துல்லியமாக ,நேர்த்தியாக பந்து வீசுபவர்களு்ம் உள்ளனர்.அதே போல் மூர் அணி,மைபா அணி என‌ கைப்ப‌ந்து விளையாட்டு கிள‌ப்க‌ளும் உள்ள‌ன‌.இப்பகுதியில் அர‌சு சார்பில் விளையாட்டு பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
இது குறித்து மூர் விளையாட்டு கிளப் தலைவர் ஹசனுதீனிடம் கேட்ட போது,

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசளித்து ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் .மேலு்ம் அரசின் விளையாட்டு துறை ஆதரவளித்தால் நாங்களே முண்ணனி கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்து இலவச பயிற்சி முகாம்களை நடத்த தயராக உள்ளோம் என்றார்
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 13, 2013 at 5:49 PM

    அருமையான நோக்கங்கள். நியாயமானகோரிக்கைகள்.

    என்ன செய்வது?

    நகரில் தோதான இடமில்லையே
    இதனால்தானே மின் கட்டண வசூல் மையம்,பத்திர பதிவு அலுவலகம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் ஊருக்கு வெளியே அமையப்பட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அப்படியே பல் நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கக்கூடிய அளவுக்கு ஊருக்கு வெளியே அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்குமானால் தற்போது நிலத்தின் மதிப்பு கட்டுபடியாகக் கூடிய நிலையில் இல்லையே. அரசு நிலமும் அறவே கிடையாது.

    ஆக இது ஒரு கனா தான்.வருத்தமான விஷயந்தான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.