கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டி சென்ற போது சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார்.அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.இது குறித்து போலீஸ் நிலையத்திலிருந்து வனச்சரகர் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் காவல்நிலையத்திற்கு வந்தனர்.
அப்பறவை பாம்பு தின்னி கழுகு என உறுதி செய்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்ததில் கழிச்சல் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது.மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து வனச்சரகர் ஜெயராமன் கூறியதாவது,விஷப்பூச்சிகளையே உணவாக சாப்பிடும் இக்கழுகு இப்பகுதியில் அரிதாகும் .இப்பகுதியை கடந்து போகும் போது கழிசல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மயங்கி கீழே விழுந்துள்ளது.மேலும் இது குஞ்சு கழுகு இது ஒரு அடிக்கு மேல் வளரும்.என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.