Monday, February 11, 2013

சுகாதார‌க்கேடு!கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி மெத்த‌ன‌ம்!காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் குற்ற‌ச்சாட்டு!

ந‌டுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி வ‌ளாக‌ம் எதிரில்
 வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில்
.

கீழக்கரையில் ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌  குப்பை கொட்டுவ‌த‌ற்கு இடம் இல்லாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார கேடு நிலவி வந்தது.  தனியார் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமாக தோணிபாலம் அருகில் சுமார் 12 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்து நீண்ட‌ கால பிர‌ச்ச‌னைக‌ள் தீர்க்க‌ப்ப‌ட்டு அரசு நிதியிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுற்று சுவர்கட்டி சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பிலிருந்து குப்பைகளை கொட்ட‌ துவ‌ங்கின‌ர்.குப்பை போடுவ‌த‌ற்கு இட‌ம் இல்லை என்ற‌ குறை தீர்ந்த‌து

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவால் தற்போது ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கீழக்கரையில் மீண்டும் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, சிக்குன்குன்யா பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குப்பை குவியலாக மாறி துர்நாற்றம் வீசி நோய்பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நடுத்தெரு தொழுகை பள்ளிக்கு பின்புறம் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறந்த நாய் ஒன்றும் அந்த பகுதியில் இரண்டு நாட்களாக கிடக்கிறது. சுகாதார ஆய்வாளரிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ந‌க‌ராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.என்றார்

கீழ‌க்க‌ரை ஆசிப் என்ப‌வ‌ர் கூறுகையில்,


ரோட்டில் குப்பையை வீசுப‌வர்க‌ள் த‌ங்க‌ளின் பொறுப்புண‌ர்ந்து வீடுக‌ளுக்கு குப்பை அக‌ற்ற‌ வரும் ப‌ணியாள‌ர்க‌ளிட‌ம் குப்பைக‌ளை கொடுக்க‌லாம்.அதை விட்டு சாலையில் வீச‌க்கூடாது.பொது ம‌க்க‌ளாகிய‌ நாமும் ஒத்துழைத்தால் கீழ‌க்க‌ரையை சுகாதார‌ ந‌க‌ர‌மாக‌ மாற்ற‌ முடியும்  என்றார்

1 comment:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 11, 2013 at 6:44 PM

  சகோதரர் ஆசிப் அவர்கள் கூறுவது போல பொது மக்களுக்கு நகர் சுகாதாரத்தை பேணுவதில் எந்த அளவுக்கு பொறுப்புள்ளதோ அதற்கு இம்மி அளவேணும் குறைவு இல்லாமல் ஏன் அதற்கு மேல் பொறுப்புணர்வு நகராட்சி நிர்வாகத்திற்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

  சகோத்ரர் ஹமீது கான் கூற்றுப்படி செத்த நாயை அகற்ற பலமுறை சுகாதார ஆய்வாளரிடம் புகார் கூறியும் அதை அகற்றாது சுகாதார சீர் கேட்டை உண்டு பண்ணுவது யார்? இத்ற்காகதானா மக்கள் வரி பணத்தை முறையாக செலுத்துகிறார்கள்.செத்த நாயினால் பரவும் சுகாதார சீர்கேட்டின் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?

  மொத்ததில் நகராட்சியின் சீர் கேட்ட நிர்வாகத்தை ஓட்டு போட்ட மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பாலாய் போன் உளுத்துப் போன சட்டத்தினால் மக்கள் பிரதிநிதிகள் தப்பித்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அவர்களை திருப்பப் அழைக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.

  யாருக்கும் திரும்ப பதவிக்கு வரும் எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை.. சட்ட நடைமுறைகளை அறியாது மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மக்கள் நலன்களை பேணுவதை புறம் தள்ளி விட்டு சமீப காலத்தில் நீதி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக கதவுகளை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காகவா இவர்களை நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?அரசும் மக்கள் வரிப் பணத்திலிருந்து கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கிறது..நிச்சயமாக காலம் இவர்களுக்கு பாடம் புகட்டும் என்பது திண்ணம்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.