ராமநாதபுரத்தைச் சேர்ந்த குலாம் மற்றும் அவரது மனைவி சீனியம்மாள் இருவரும் இணைந்து கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்தோர் உள்ளிட்ட பலரிடமும் குறைந்த வட்டியில் நகை அடகு வாங்குவதாக நூதனமுறையில் மோசடி செய்துள்ளனர். இவர்கள் போலி பில் தயாரித்து அதன் மூலம் 50 பைசா வட்டியில் நகை அடகு வாங்குவதாக கூறி தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, நகையை ஏமாற்றிச் சென்றுள்ளனர்.
நகையை மீட்பதற்காக அடகு வைத்தவர்கள் கடைக்கு சென்ற போது குலாமும், சீனியம்மாளும் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் கீழக்கரை காவல்நிலையம் வந்தனர்.அவர்களிடம் இருந்து 100 பவுனுக்கு மேல் நகை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களைப் போன்று மேலும் பலர் இவர்களிடம் நகை அடகு வைத்திருக்கலாம் என தெரிகிறது மேலும் பலரிடம் லோன் வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது .போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிக அளவிலான நகைகள் ஏமாற்றப்பட்டிருப்பது இப்பகுதியில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.