Monday, February 25, 2013

கீழ‌க்க‌ரையில் மின்னணு சாதன கழிவுகள் குறித்த‌ தேசிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், தேசிய அளவிலான இன்றைய நடைமுறையில் உள்ள மின்னணு சாதனங்களின் கழிவுகளை பயன்படுத்தும் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன ரசாயனத்துறை பேராசிரியர் சிதம்பரம் முன்னிலை வகித்தனர். கல்லு�ரி பொறியியல் ரசாயனத்துறை பேராசிரியர் ஆஷாதேவி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் பேசுகையில், சீனாவில் கழிவான மின்னணு சாதனங்களை மீண்டும் பயன்படுத்த ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், மின்னணு கழிவுகளை முறையாக பயன்படுத்தா விட்டால் அது நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் பெருமளவிற்கு பாதிக்கும், என்றும் கூறினார்.
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகட்டட கலைத்துறை தலைவர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் இப்ராகிம் பங்கேற்று,
 எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்னணு சாதனங்களின் கழிவுகளை சேகரித்து அவற்றை சுழற்சி முறையில் மீண்டும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாது காப்பு மாசுபடாமல் பயன்படுத்த கூடிய கருத்துகளையும் எடுத்து கூறினார்.மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரையை துறைத்தலைவர்கள் அழகிய மீனாள், தாவிது ராஜா தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாக்யராஜ், ரோஹன், கார்த்தி, சண்முகபிரியா மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தனர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.