கீழக்கரை நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஹாஜா முஹைதீன், ஆணையாளர் முகமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட நடவடிக்கைகள் அனைத்து வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி...
கவுன்சிலர் ரபியுதீன்: நிர்வாகத்தில் சேர்மனின் கணவர் ரிஸ்வான் தலையீடு அதிகளவில் உள்ளது.மேலும் கவுன்சிலர்கள் குறித்து தவறாக பேசி திரிகிறார்.இது சரியல்ல மக்கள் மத்தியில் நகராட்சி நிர்வாகம் குறித்து அதிருப்தி நிலவி வருகிறது.
சேர்மன் : கணவரிடம் ஏன் தொடர் கொள்ள வேண்டும்.என்னிடமே தொடர்பு கொள்ளலாமே.கணவரிடம் நீங்களே குறைகளை சொல்லிவிட்டு பின்னர் தலையீடு என்று குற்றம் சொல்கிறீர்கள்
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா: உங்களை தொடர்பு கொண்டால் உங்கள் கணவர்தான் பதில் சொல்கிறார்.
கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ்:– கூட்ட நடவடிக்கையை வீடியோவில் பதிவு செய்ய யார் அனுமதி அளித்தது? கவுன்சிலருக்கு தடை விதிக்க அதிகாரம் உள்ளதா?
சேர்மன்:– நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்களின் செயல்பாட்டை பதிவு செய் வதற்காக நிர்வாகத்தின் சார்பில் வீடியோ எடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலருக்கு தடை விதிக்க தலை வருக்கு முழு அதிகாரம் உள் ளது.
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா: -
கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமை சஸ்பெண்ட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக் அறிவிப்பு வெளியிட்டிருந்தீர்கள் இது குறித்து சென்ற கூட்டத்தில் விவாதித்தீர்களா?கவுன்சிலர்களிடம் எதுவுமே விவாதிக்காமல் எப்படி தன்னிச்சையாக சஸ்பெண்ட் என்று அறிவிக்கலாம்?கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தெருவிளக்குகள் போலியானது என இது குறித்து கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எனவே இதை நாம் தட்டிகேட்கவில்லையென்றாரல் நாளை இதே நிலைமை அனைத்து கவுன்சிலர்களுக்கு ஏற்படும்
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா:- நினைத்தால் சஸ்பெண்ட் செய்வதும் பிறகு ரத்து செய்வதற்கும் நகர்மன்றம் விளையாட்டு மைதானம் அல்ல
சேர்மன்: நீங்கள் எங்களை பற்றி தவறாக நோட்டீஸ் அடிப்பீர்கள்,போஸ்டர் ஒட்டுவீர்கள் நீங்கள் எது செய்தாலும் நான் கேட்க கூடாது அப்படித்தானே?
கவுன்சிலர் ஜெயபிரகாஷ்:- கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்தததாக அறிவித்தததும் ரத்து செய்வதாக அறிவிப்பதும் நகராட்சிக்கு தவறான முன்னுதாரணம். கமிஷனர் அவர்களே சேர்மனுக்கு கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்வதற்கு அதிகாரமில்லை என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
கமிஷனர்: மினிட் புத்தகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.இதில் எனக்கு சம்பந்தமில்லை தலைவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு.
கவுன்சிலர் சாஹுல் ஹமீது:- டெம்பர் பிளேசர் பழுது நீக்கியதாக ரூ50 ஆயிரத்திற்கு மேல் போலி பில் பெறப்பட்டுள்ளது.இதற்கு பணம் வழங்கக்கூடாது.அரசு பணத்தில் பெற்ற பெட்ரோலை சேர்மன் தனது சொந்த வாகனத்துக்கு பயன் படுத்தினீர்களே அதற்கான பணத்தை செலுத்தி விட்டீர்களா? மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் முறைகேடாக விற்கபட்டுள்ளது.முறையாக டெண்டர் விடாதது ஏன்?நகராட்சியில் கள்ளத்தனம் செய்யதீர்கள்
சேர்மன்:தற்போது வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பற்றி மட்டும் பேசுங்கள் இது குறித்து இங்கே பேசாதீர்கள் எனது அலுவலகத்திற்கு வந்து பேசுங்கள்.
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா :- இது என்ன குடும்ப விவகாரமா? ஏன் இங்கே பேச கூடாது.மேலும் மினி புக்கை வெளியில் எடுத்து செல்லக்கூடாது?
சேர்மன்: கையை நீட்டி பேசாதீர்கள்.
கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம் :- சேர்மன் அவர்கள் தற்போது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து என்ற அறிவிப்பை தீர்மானத்தில் வைத்துள்ளார்.ஆனால் சில நாட்களுக்கு முன்பாகவே சேர்மனின் உத்தரவுக்கு எதிராக நான் கோர்ட்டில் சஸ்பெண்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளேன்(அது சம்பந்தமாக ஆவணங்களை காட்டினார்)எனவே இதை தற்போதைய தீர்மானத்தில் பதிவு செய்ய வேண்டும்.கோர்டின் உத்தரவு தொடர்பான ஆவணங்களை நேற்றே சேர்மனுக்கு அனுப்பி விட்டேன்.
சேர்மன்: எனக்கு கிடைக்கவில்லை
கவுன்சிலர் பாவா:- பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு அலுவலகத்துக்கு மாதக்கணக்காக அலைந்து திரிகின்றனர்ஆனால் கமிஷனரோ 10 நிமிடம்தான் அலுவலகத்துக்கு வருகிறார்.அலுவலகம் செயல்பாடு சரியில்லை
கமிஷனர் : நான் தமிழகம் முழுவது சுற்றி வருபவன் முழு நேரமும் அலுவலகத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது.
துணை சேர்மன் ஹாஜாமைதீன்:– கீழக்கரை நகரசபை நிர்வாகம் நீண்ட காலத்துக்கு பின்னர் அ.தி. மு.க.வின் வசம் வந்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலி தாவின் கருணையால் கீழக்க ரைக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த திட் டங்கள் அனைத்தும் கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நகர் வளர்ச்சியடையும் வகையில் நிறைவேற்ற முடி யும். கீழக்கரை நகராட்சி நிர்வாக சீர்குலைவுக்கு கமிஷனரே காரணம் மேலும் அதிகாரிகள் கவனக் குறைவால் தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றனர். இனி வரும் காலங்களில் கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்படுவதுடன் அதிகாரி கள் கடமையை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.என்றார்
பேசி முடித்த சிறிது நேரத்தில் துணை சேர்மன் மயங்கி விழுந்தார் உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிர்வாக செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.7 கவுன்சிலர்களுடன் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சிதலைவர் ராவியத்துல் கதரியா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
திமுக கவுன்சிலர்கள் வேண்டுமென்றே அதிமுக நகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று பல் வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் இவர்களுக்கு ஊர் நலனில் அக்கறையில்லை.இதற்கு சில சுயேச்சைகளும் உடந்தை.சிறப்பான நிர்வாகம் இங்கு நடைபெற்று வருகிறது என்றார்.
இது குறித்து கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா ,முகைதின் இப்ராகிம் ஆகியோர் கூறுகையில் ,
கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேறவில்லை பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவில்லாமல் எப்படி தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும்.தலைவர் தவறான தகவலை அளித்துள்ளார்.கமிஷனரும் இதற்கு உடந்தையாக உள்ளார்.இதற்கு சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வோம்.என்றனர்.
bouth drama chalrai utharrrrrrrrrrrrr.....
ReplyDeleteகமிஷனர் : நான் தமிழகம் முழுவது சுற்றி வருபவன் முழு நேரமும் அலுவலகத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது.
ReplyDeleteமரியாதைக்குரிய ஆணையாளர் அவர்களே நீங்கள் இந்தியா பூராவும் ஏன் வசதி இருக்கும் படசத்தில் உலகம் பூராவும் சுற்றி வலம் வாருங்கள். அதே நேரத்தில் நீங்கள் தமிழக அரசால் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் என்பதை திண்ணமாக மனதில் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் கூட்டம் நடைபெறும் நேரத்தில் தாங்கள் கட்டாயமாக ஆஜராவது கடமையா இல்லையா? ஏனென்றால் நீங்கள் மக்கள் நலம் பேணும் அரசு அலுவல்ர்
கமிஷனர் : நான் தமிழகம் முழுவது சுற்றி வருபவன் முழு நேரமும் அலுவலகத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது.SOURCE: KEELAKARAITIMES.BLOGSPOT.IN DT: 20 FEB 2013
ReplyDeleteமரியாதைக்குரிய ஆணையாளர் அவர்களே நீங்கள் இந்தியா பூராவும் ஏன் வசதி இருக்கும் படசத்தில் உலகம் பூராவும் சுற்றி வலம் வாருங்கள். அதே நேரத்தில் நீங்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கீழக்கரை நகராட்சி ஆணையாளர் என்பதை திண்ணமாக மனதில் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் கூட்டம் நடைபெறும் நேரத்தில் தாங்கள் கட்டாயமாக ஆஜராவது கடமையா இல்லையா? ஏனென்றால் நீங்கள் மக்கள் நலம் பேணும் அரசு அலுவல்ர்
வடக்குதெரு நேர்மை ரோஜா அதுதான் இடிமின்னல் ஹாஜா
ReplyDeleteநெஞ்சிலே தீன் அவர்தான் மெம்பர் 18வது முகைதீன்
இவங்க ரெண்டு பேரும் நகராட்சியின் ராஜா
seyed ibrahim
sharjah