Monday, February 18, 2013

கீழ‌க்க‌ரை கல்லூரியில் கடலோர விழிப்புணர்வு கருத்தரங்கம் !


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடலோர விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் வரவேற்றார். தாளாளர்யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ‘தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் பிளஸ்2வில் வெற்றி பெறுகின்றனர். சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்கின்றனர். இதற்கு பொருளாதார பின் னடைவே காரணம். நீங்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் சிறப்பான வாய்ப் பை பெற்றுள்ளீர்கள். நம்முடைய மிகப்பெரிய சொத்து கல்வி. இன் னொன்று உடல் ஆரோக்கியம். இவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவானார்.
நாம் எங்கு பயில்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி செயலாற்றுகின்றோம் என்பதே முக்கியம். மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் 665 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை எங்கள் குழு நிறைவு செய்துள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கை சீற்றங்களால் படகு கவிழ்தல் போன்ற ஆபத்து ஏற்பட்டால், டோல்பிரி எண் 1093ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் மீனவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.
 மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு ஏடிஜிபி சைலேந்திர‌பாபு ப‌திலளித்தார்.

2 comments:

  1. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கை சீற்றங்களால் படகு கவிழ்தல் போன்ற ஆபத்து ஏற்பட்டால், அறிமுகப்படுத்திய டோல்பிரி எண் 1093ஐ எவ்வாறு பயன்படுத்துவது / உதவிக்கு எப்படி அழைப்பது என்பதை நம்ம கடல் தொழிலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு அவர்கள் கூடும் முக்கிய இடங்களில் கலந்தாலோசித்தல் கூட்டம் போட்டு விளக்கினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 19, 2013 at 7:36 PM

      கீழக்கரையை பொறுத்தமட்டிலும் தங்களின் மேலான ஆலோசனையை மீனவச் சங்கங்கள் மூலம் ஏற்கனவே செயல் படுத்தி உள்ளார்கள் என்பதை அன்புடன் தெரியபடுத்திக் கொள்கிறோம். இது போலவே தமிழக கடலோரக் கிராமங்கள் அனைத்திலும் செயல் படுத்தப் பட்டுள்ளது என அறியபப்டுகிறது

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.