விமான டிக்கெட் மற்றும் புகார் விபரத்துடன் கீழக்கரை ஹுசைன்
துபாயிலிருந்து திருச்சிக்கு பிப்ரவரி 14 இரவு 9.45க்கு புறப்பட்ட ஐ எக்ஸ் 612 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இமிகிரேசன் உள்ளிட்டவைகளை நிறைவு செய்து தங்களது உடமைகளை எடுத்து செல்வதற்கு கன்வேயர் பெல்ட் அமைந்திருக்கும் பகுதியில் காத்திருந்த போது சுமார் 60 பயணிகளுக்கு தங்களது உடமைகள் முழுமையாக கிடைக்கவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடமைகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து எழுத்து மூலம் புகார் தெரிவித்தனர்.
உடமைகள் கிடைக்க பெறாத அனைவரிடமும் புகாரை பெற்ற விமான நிலைய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்ப உறுதியளித்தனர்.பின்னர் பயணிகள் தமது ஊர்களுக்கு திரும்பினர் ஆனால் இது வரை உடமைகள் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த அதே விமானத்தில் பயணம் செய்த குத்புதீன் ராஜா கூறியதாவது,
நீண்ட நேரம் காத்திருந்து நான் ஊர் திரும்பி விட்டேன் இன்று வரை உடமைகள் கிடைக்கவில்லை இதனால் பெருத்த ஏமாற்றமாக உள்ளது.இது குறித்து விமான நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு ' கடந்த சில நாட்களாக 240 பொருள்கள் வரவில்லை இதனால் 135 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 186 பயணிகளுக்கான இருக்கைகள் உடைய விமானத்தில் அதிக பட்சமாக 165 பயனிகள் தான் ஏற்ற வேண்டும் ஆனால் கூடுதலாக பயணிகளை ஏற்றுவதால் உடைமைகளை ஏற்ற முடியாமல் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்' எனவே அதிகாரிகள் உடனடியாக எங்களது உடமைகளை மீட்டு தர வேண்டும் என்றார்.
கீழக்கரையை சேர்ந்த அதே விமானத்தில் பயணம் செய்த மற்றோரு பயணி ஹீசைன் கூறியதாவது,
ஒரு வருடம் கழித்து மகிழ்ச்சியோடு ஊரு திரும்பிய எனக்கு உடமைகள் வராதது மன வேதனையளிக்கிறது.நாளை நீண்ட நேரம் காத்திருந்து நான் ஊர் திரும்பி விட்டேன் இன்று வரை உடமைகள் வரும் என நாட்களை கடத்துகிறார்கள்.உடனடியாக உடமைகளை மீட்டு தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.