தமுமுக கீழக்கரை நகர் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்...
கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக குழு கூட்டம் நகர் தலைவர் எஸ்.சிராஜீதீன் தலைமையில் நகர் செயலாளர் அப்தாகிர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் இயக்க கொடியினை ஏற்றுவது என்றும்
கீழக்கரை நகரில் உள்ள டீக்கடைகளில் கலப்பட தேயிலை பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் பொது மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி ஆணையரை கண்டித்தும்,
கீழக்கரை நகர் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வதில் கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ,
நகராட்சி தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதில்
லை என பத்திரிக்கையாளர்களிடம் தவறான தகவலை வெளியிட்ட நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என்றும்,
பைவ் ஸ்டார் கிரில் ஒர்க்ஸாப்பில் நகராட்சி பெயரில் ரூ50ஆயிரத்திற்கு பில் வாங்க தலைவரின் கணவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கட்டண அலுவலகத்தை இன்று வரை மின்சாரத்துறையிடம் ஒப்படைக்காமல் மக்களை சிரமத்துக்குள்ளாக்குவதை கண்டித்தும்
கடந்த இரண்டு வருடங்களாக்க கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் செலவிடப்பட்ட நிதிகளை மறுதணிக்கை செய்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
மொத்தத்தில் கீழக்கரை சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கலைக்க கோரி தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.
இறுதியில் நகர் பொருளாளர் நன்றி கூறினார்.
சபாஷ் தார்மீக யுத்தம் தொடங்க ஆரம்பித்து விட்டது
ReplyDeleteமறு பதிப்பு - பகுதி
மங்காத்தாவின் தங்கச்சி மகன்11 February 2013 6:44 pm
மொத்ததில் நகராட்சியின் சீர் கேட்ட நிர்வாகத்தை ஓட்டு போட்ட மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பாலாய் போன் உளுத்துப் போன சட்டத்தினால் மக்கள் பிரதிநிதிகள் தப்பித்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அவர்களை திருப்பப் அழைக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.
யாருக்கும் திரும்ப பதவிக்கு வரும் எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை.. சட்ட நடைமுறைகளை அறியாது மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மக்கள் நலன்களை பேணுவதை புறம் தள்ளி விட்டு சமீப காலத்தில் நீதி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக கதவுகளை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காகவா இவர்களை நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?அரசும் மக்கள் வரிப் பணத்திலிருந்து கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கிறது..நிச்சயமாக காலம் இவர்களுக்கு பாடம் புகட்டும் என்பது திண்ணம்.
சபாஷ் தார்மீக யுத்தம் தொடஙக ஆரம்பித்து விட்டது
ReplyDeleteமறு பதிப்பு
மங்காத்தாவின் தங்கச்சி மகன்12 February 2013 6:21 pm
கத்தரிக்காய் முற்றி விட்டது. கடைக்கு வர ஆரம்பித்து விட்ட்து
சீச்சீ...என்ன ஒரு கீழ் தரமான நிர்வாகம் நடக்கிறது கீழக்கரை நகராட்சியில்.
கடந்த ஆண்டு நக்ராட்சி அலுவலத்தில் குத்பா கமிட்டி மற்றும் அனைத்து ஜ்மாத், சமூக நல அமைபுகளை அடங்கிய ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது ( 20 செப்டம்பர் 2012 வாக்கில்) அதில் பரிந்துரை செய்யப்பட்டவைகளில் கீழ் கண்ட ஒன்றுமாகும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்று அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கருத்துக்கள் ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்ளப்பட்டது - கீழக்கரை டைம்ஸ் நாள் 20 செப்டம்பர் 2012.
அது போன்ற ஒரு கூட்டத்தை உடனடியாக கூட்டி இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் மக்கள் நல பணிகள் அனைத்தும் பாழாகி விடும்.