தில்லையேந்தல் பஞ்சாயத்துட்பட்ட தோணிப்பாலம் அருகில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டி உரமாக்குவதற்கான உரகிடங்கு பணிகள் பல்லாண்டுகளுக்கு பின் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
இதை தொடர்ந்து இன்று தொடக்கமாக கீழக்கரையிலிருந்து டிரக் மூலம் எடுத்து வரப்பட்ட குப்பைகள் உரக்கிடங்கில் கொட்டப்பட்டது.இந்நிகழ்விற்கு கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிஷனர் முகம்மது முகைதீன்,மேற்பார்வையாளர் அறிவழகன்,சுகாதார ஆய்வாளர் அயூப்கான்,ஒப்பந்தாரர் உத்தண்டி,கவுன்சிலர்கள் அன்வர் அலி,பாவா செய்யது கருணை,இடிமின்னல் ஹாஜா,சித்தீக் அலி,ரபியுதீன்,தங்கராஜ்,மீனாள்,மஜிதா பீவி,முன்னாள் கவுன்சிலர் வேல்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தில்லையேந்தல் பகுதியை சேர்ந்த சிலர் குப்பை வண்டியை மறித்து குப்பையை கொட்ட விடாமல் தடுக்க போவதாக செய்திகள் பரவியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.கீழக்கரை காவல்துறையில் பாதுகாப்பு கோரியிருந்ததை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இளங்கொவன் தலைமையில் எஸ்.ஐ கார்மேம் ,20 ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் உரக்கிடங்கு வாசலிலும்,குப்பை வாகனம் வரும் வழியிலும் பாதுகாப்பளித்து கண்காணித்தனர்.
கீழக்கரை நகராட்சிக்கு நீண்ட காலமாக குப்பை கொட்டுவதற்கு நிரந்த இடமில்லாமல் இருந்த குறை தற்போது நீங்கியுள்ளது.குப்பை கிடங்கு அமையப்பெற்றதினால் தொடர்ந்து நகர் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு கீழக்கரை நகரம் குப்பையில்லா சுத்தமான நகரமாக உருவெடுக்கும் என்ற மக்களின் நம்பிக்கை செயலாக்கம் பெறுவதற்கு வழி கிடைத்து உள்ளது.
அனைவராலும் பரிகசிக்கப்பட்ட குப்பைக்கரையிலிருந்து குப்பைகள் “பைய் பைய்” சொல்ல ஆரம்பித்ததால் எங்கள் சீறும் சீறப்பும் பெற்ற, நினைத்ததை முடித்தான் பட்டணம்-பௌத்திர மாணிக்கம் பட்டணம்-செம்பி நகர் என சீராட்டப்பட்ட கீழக்கரை புன்னகையுடன் மிளிர, மலரத் தொடக்கி விட்டாள்..இந்த சந்தோஷம் நீடிக்க நல் வாழ்த்துகள்..
ReplyDeleteThillayenthal panchayathu kararkal Marupadiyum prachanai panna enna pannuvinga
ReplyDeletesuper
ReplyDeleteகம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!
http://99likes.blogspot.in/2012/05/blog-post.html