Tuesday, February 12, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தை சீர்குலைக்க‌ ச‌தி!சேர்ம‌ன் அறிக்கை!

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ..

கீழக்க‌ரை நக‌ராட்சி நிர்வாக‌ம் செம்மையாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இதை சீர்குலைக்கும் வித‌மாக‌ சில‌ர் செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

கூடுத‌லாக‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மிப்ப‌த‌ற்கு அர‌சு ரூ24 ல‌ட்ச‌ம் ஒதுக்கியுள்ள‌து ஆனால் 21 வார்டுக‌ளில் இதை செய‌ல்ப‌டுத்துவ‌த‌ற்கு இந்த‌ நிதி போதாது கூடுத‌லாக‌ ரூ 38 ல‌ட்ச‌ம் வ‌ரை கேட்டுள்ளோம்.இத‌னால் தான் தாம‌த‌மே த‌விர‌ க‌மிஷ‌னுக்காக‌ தாம‌த‌ம் என்ப‌தெல்லாம் பொய்யான‌ குற்ற‌ச்சாட்டு.

அதுப்போன்று ட‌ம்ப‌ர் பிளேசர் ப‌ழுது பார்க்க கூடுத‌லாக‌ ப‌ண‌ம் பெறுவ‌த‌ற்கு போலியான‌ பில் பெற‌ப்ப‌ட்டு க‌ண‌க்கு காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ குற்ற‌ஞ்சாட்டுகிறார்க‌ள்.ட‌ம்ப‌ர் பிளேச‌ர் என‌ப‌து க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ம்  இதை ப‌ழுது பார்ப்ப‌த‌ற்கு கூடுத‌ல் செல‌வாகும் என‌ப‌து அறிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் ரூ 5ஆயிர‌ம் 10ஆயிர‌ம்தான் ஆகும் என்ப‌தெல்லாம் வீண் பேச்சாகும் என‌வே இதிலும் உண்மையில்லை.

உர‌க்கிட‌ங்கில் பிளாஸ்டிக் க‌ழிவுக‌ளை முறைகேடாக‌ விற்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ குற்ற‌ம் சாட்டியுள்ளார்க‌ள்.இதுவும் க‌ற்ப‌னைதான்.
குற்ற‌ம் சாட்டுப‌வ‌ர்க‌ளை நான் கேட்கிறேன் இதையேல்லாம் உங்க‌ளால‌ நிரூபிக்க‌ முடியுமா ?ஏன் இந்த‌ வீண் வேலை இது போன்ற‌ செயல்க‌ளால் ம‌க்க‌ளுக்கான‌ ப‌ணிக‌ள் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌டுகிற‌து.

இத‌ற்கெல்லாம் பின்ண‌ணி சில‌ முன்னாள் க‌வுன்சில‌ர்க‌ளும்,இடைத‌ர‌க‌ர‌க‌ர்க‌ளும்தான்

ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் காலை 6 ம‌ணிக்கு திற‌க்க‌ப்ப‌ட்டு துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் உரிய‌ இட‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டுவார்க‌ள்.த‌ற்போது அந்த‌ ந‌டைமுறை நிறுத்த‌ப்ப‌ட்டு வேறு இட‌த்திலிருந்து அவ‌ர்க‌ள் ப‌ணிக்கு அனுப்ப‌ப்ப‌டுகிறார்க‌ள்.இத‌னால் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் இப்போது காலை 9 ம‌ணிக்குதான் திற‌க்க‌ப்ப‌டுகிறது.இத‌னால் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தை த‌ன் வீடு போல் ப‌ய‌ன்ப‌டுத்தி காலை க‌ட‌ன் ,வெட்டி அர‌ட்டை அடிப்ப‌து போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ந்த‌ சில‌ருக்கு பெரும் சிர‌ம‌மாகி போன‌து.இத‌னால் ஆத்திர‌ம‌டைந்த‌ இவ‌ர்க‌ள் ந‌க‌ராட்சிக்கு எதிராக‌ அவ‌தூறுகளை ப‌ர‌ப்பி வ‌ருகிறார் இப்ப‌டி செயல்ப‌ட‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளில் இதுவும் ஒன்று..

விரைவில் அலுவ‌ல‌க‌ நுழைவு வாயிலில் ரெஜிஸ்ட‌ர் புத்தக‌ம் வைக்க‌ உள்ளேன்.இத‌ன் மூல‌ம் யார் யார் அலுவல‌க‌த்திற்கு வ‌ருகிறார்க‌ள் என‌ அறிய‌ முடியும்.அதிகாரிக‌ளிட‌ம் ஆலோச‌னை செய்து சி சி டி வி கேம‌ரா பொருத்த‌வும் ஏற்படும் செய்ய‌ப்ப‌டும்

 பொதும‌க்க‌ள் அனைத்தையும் க‌வ‌னித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்ப‌தை ம‌றந்து அவ‌தூறுக‌ளை அள்ளிவீசி ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தை சீர்குலைக்க‌ சில‌ர் ச‌தி செய்கிறாக‌ள்.இறைவ‌ன் அருளால் ம‌க்க‌ள் ஆத‌ர‌வுட‌ன் முறிய‌டிப்போம் என‌ப‌தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 

1 comment:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 12, 2013 at 6:21 PM

  கத்தரிக்காய் முற்றி விட்டது. கடைக்கு வர ஆரம்பித்து விட்ட்து

  சீச்சீ...என்ன ஒரு கீழ் தரமான நிர்வாகம் நடக்கிறது கீழக்கரை நகராட்சியில்.

  கடந்த ஆண்டு நக்ராட்சி அலுவலத்தில் குத்பா கமிட்டி மற்றும் அனைத்து ஜ்மாத், சமூக நல அமைபுகளை அடங்கிய ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது ( 20 செப்டம்பர் 2012 வாக்கில்) அதில் பரிந்துரை செய்யப்பட்டவைகளில் கீழ் கண்ட ஒன்றுமாகும்.

  மூன்று மாத‌த்திற்கு ஒரு முறையாவ‌து இதுபோன்று அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் அழைத்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌ட‌த்துவ‌து உள்ளிட்ட‌ க‌ருத்துக்க‌ள் ஆலோச‌னை கூட்ட‌த்தின் வாயிலாக‌ கேட்டு கொள்ள‌ப்ப‌ட்டது - கீழக்கரை டைம்ஸ் நாள் 20 செப்டம்பர் 2012.

  அது போன்ற ஒரு கூட்டத்தை உடனடியாக கூட்டி இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் மக்கள் நல பணிகள் அனைத்தும் பாழாகி விடும்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.