கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓசூர் அசோக் லேய்லண்ட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நடந்த நேர்முகத் தேர்வில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார்.
அசோக் லேய்லண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை முதுநிலை மேலாளர் ஆண்டனிதாஸ், துணை மேலாளர் சுந்தராஜன் ஆகியோர் நேர்முக தேர்வை நடத்தினர். முன்னதாக முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தியாகும் பொருட்கள், நிர்வாகத்தின் சலுகைகள், ஊதியம் குறித்து விரிவாக விளக்கினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.