துபாயிலிருந்து திருச்சி க்கு கடந்த 14ம் தேதி இரவு 9.45 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பயணிகள் ஏராளமானோர் பயணித்தனர். திருச்சி ஏர்போட்டிற்கு விமானம் வந்தவுடன் கன்வேயர் பெல்ட் பகுதியில் தங்களின் உடமைகளுக்கு பயணிகள் காத்திருந்தனர். இதில் 62 பயணிகளின் உடைமைகள் முழுமையாக கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். வெகு நேரம் காத்திருந்து வெறுப்படைந்த பயணிகள், அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டனர். விமானத்தில் அதிக சுமை இருந்ததால் உடமைகளை எடுத்து வரவில்லை. அடுத்த விமானத்தில் வந்துவிடும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏமாற்றமடைந்த 10க்கும் மேற்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த குத்புதீன் ராஜா, ஹூசைன் அலி உள்ளிட்ட ஏராளமான பயணிகள் சொந்த ஊர் திரும்பி 5 நாட்களாகியும் கிடைக்கதாதால் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.இது குறித்து செய்திகள் வெளியானது.
அனைத்து பயணிகளுக்கும் உடமைகள் கிடைக்க ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். உடமைகள் கிடக்காத பயணிகளுக்கு உடமைகளை திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்து கீழக்கரை மற்றும் பல ஊர்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி சென்று தங்களது உடமைகளை பெற்று வந்தனர்.
இது குறித்து விமானத்தில் பயணித்த கீழக்கரையைச் சேர்ந்த குத்புதீன் ராஜா, ஹூசைன் அலி உள்ளிட்டோர் கூறுகையில்,
நேற்று முன் தினம் ஏர் இந்தியா நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தது அதனபடி எங்களது உடமைகளை திருச்சி விமான நிலையம் சென்று பெற்று வந்தோம் பயணப்படியாக ரூ1000 தரப்பட்டது.உடனடியாக செய்தி வெளியிட்டு எங்களது உடமைகளை பெற்று தர உதவியாக இருந்த செய்தியாளர்களுக்கும்,ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.