கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன பரிசோசனை கருவிகள்.பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அரசு டாக்டர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கீழக்கரை தலைமை அரசு மருத்துவர் டாக்டர் ராஜ்மோகன் கூறியதாவது,
கீழக்கரை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பரமக்குடி,ராமநாதபுரம் ஆகிய அரசு மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கீழக்கரையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான பொறுப்பாளராக அரசு மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் உள்ளார்.
தமிழக அரசு சார்பில் தொற்றில்லாத நோய் தடுப்பு Non-communicable diseases (என்சிடி) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது இதன் மூலம் 30 வயதிற்குக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் இருதய நோய்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்காணித்து, நோய் கட்டுப்பாடு பணிகளை மேம்படுத்த, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு திட்டம் தயாரித்துள்ளது.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் "தொற்றில்லாத நோய் தடுப்பு திட்டம்' முழு அளவில் செயல்பட உள்ளது. இதன் மூலம் நோய் வருவதற்கு முன்பாகவே பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளாலாம்.
இதற்கான மருத்துவ பரிசோதனைக்கான நவீன கருவிகள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பெண்களுக்கு கர்ப்பபை சம்பந்தமான பரிசோதனைகளுக்கான நவீன கருவியும் இங்கு உள்ளது.
மேலும் சுமார் 12 லட்சம் செலவில் கீழக்கரை அரசு மருத்துவமனையின் சுற்றுப்புற சுவர்,மருந்தகத்தில் ஏசி,நுழைவு வாயில் தூன்,நடைபாதை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை கட்டிட பராமரிப்பு நிதியிலிருந்து அரசாங்கம் செயல்படுத்தி மேம்படுத்த உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது எனவே பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்
மனம் நிறைந்த நல் வாழ்த்துகள். அத்துடன் நவீன உபகரணங்கள் செவ்வனே செயல் பட்டு மக்களுக்கு நலம் பயக்க சீரிய முறையில் கண்காணித்து வர வேண்டுகிறோம்.
ReplyDelete