Friday, February 1, 2013

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்டம்!முறைகேடுக‌ளை க‌ண்டிப்ப‌தாக‌ 6 க‌வுன்சில‌ர்க‌ள் வெளிந‌ட‌ப்பு!


 தலைவர் ராவியத்துல் கதரியா          துணைத்தலைவர் ஹாஜா முகைதீன்                     கமிஷனர் முகம்மது முகைதீன்,
 


கீழக்கரை நகராட்சிகூட்டம், தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில், கமிஷனர் முகம்மது முகைதீன், துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில் நடந்தது.


 க‌வுன்சில‌ர்   சித்திக் அலி:

கடந்த நகராட்சி கூட்டத்தில் தலை வரின் கணவர் தலையீட்டை கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தவறாக சித்தரித்து நகராட்சி தலைவர் கணவர் ரிஸ்வான் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தலைவர்: இதை பற்றி இங்கு பேச வேண்டாம். அலுவலகத்திற்கு வாருங்கள் பேசிக் கொள்வோம்.





க‌வுன்சில‌ர்   ஹாஜா நஜ்முதீன்:  

 கலெக்டரின் ஒப்புதல் இல்லாமல் நகரில் விற்பனைக்கு வராத ஒரு நாளிதழில் 24 ஆயிரரம் ரூபாய்க்கு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அனுமதியில்லாமல் செக் வழங்கிய கமிஷனர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
கமிஷனர்: தலைவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

தலைவர்: பி.ஆர்.ஓ., போனில் கூறியதால் விளம்பரம் தரப்பட்டது.

ஹாஜா நஜ்முதீன்: பி.ஆர்.ஓ., கடிதம் உள்ளதா?

தலைவர்: போன் தகவலை வைத்தே வழங்கப்பட்டது. எழுத்து மூலமாக வழங்கப்படவில்லை.

க‌வுன்சில‌ர்  முகைதின் இபுராகிம்:-

 மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பொதுநிதியில் நடைபெறும் பணிகளுக்கு முறையாக டெண்டர் விடுவது கிடையாது. இதை கண்டித்து ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறேன்.

 இவருடன் கவுன்சிலர்கள் ஹாஜா நஜ்முதீன், சித்திக், ரபியுதீன், அரூஸியா பேகம், தாஜின் அலிமா வெளிநடப்பு செய்தனர்.

 
க‌வுன்சில‌ர் ஜெயபிரகாஷ்:
 
எனது வார்டுக்கு வரும் குடிநீர் பைப்பை ஏன் 24 நாட்க ளாக அடைத்து வைத்துள்ளீர்கள்.
 



 

கமிஷனர்: -
 
20வது வார் டில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்று புகார் வந்ததால் அடைத்துள்ளோம்.
 
ஜெயபிரகாஷ்:
சாக்கடை நீர் கலந்து குடிநீர் வருவ தாக புகார் வந்தால், சாக் கடையை அல்லவா அடை க்க வேண்டும். அதைவிட்டு பைப்பை ஏன் அடைத்தீர் கள்? எங்கள் பகுதி மக்கள் வீட்டு வரி கட்டவில்லையா?
 
கமிஷனர்:
தவறுதலாக நடந்து விட்டது. இனிமேல் நடக்காமல் பார்த்து கொள் வோம்.

ஜெயபிரகாஷ்: "டம்பர் பிளேசர்'(குப்பை அள்ளும் இயந்திரம்) பழுது நீக்க டெண்டர் அளித்துள்ள நிறுவனங்களுக்கு முறையாக உரிமம் உள்ளதா. நகராட்சிக்கு வரி செலுத்தியுள்ளார்களா ? சேதுக்க‌ரையில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் குடிநீர் தேவைக்காக‌ கட‌ந்த‌ சில ஆண்டுக‌ளுக்கு முன் கிண‌றுக‌ள் தோண்ட‌ப்ப‌ட்டு 10 மோட்டர் ப‌ம்புக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌து.பின்ன‌ர் அது சாத்திய‌மில்லை என‌ நிறுத்தி வைத்த‌ன‌ர் இத‌ற்காக‌ வாங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ 10 மோட்டார் பம்ப்களை காண‌வில்லை இது குறித்து அந்த‌ ப‌குதி ம‌க்க‌ளிட‌ம் கேட்ட‌ போது ந‌க‌ராட்சி ஊழிய‌ர்க‌ள்தான் ப‌ம்ப்க‌ளை எடுத்து சென்ற‌தாக‌  கூறின‌ர்?



க‌மிச‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன்:‍     

இது குறித்து விசார‌ணை செய்து த‌வறு யார் செய்திருந்தாலும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும்.


 

2 comments:

  1. பகுருதீன்February 1, 2013 at 12:36 PM

    உழலுக்கு எதிராக குரல் குடுத்த்தர்க்காக 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுராஹிம் இரண்டு கூட்டத்திற்க்கு சஸ்பென்ட் செய்ய பட்டு உள்ளார் இதை சேர்மன் சுயநலத்திற்காக தனது கணவரின் தலையிடுகளை நியாயப்படுத்தி உள்ளார் நகராட்சி கமிஷனரும் இதற்க்கு துணை போகிறார்.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 1, 2013 at 6:39 PM

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையே பதம் பார்க்க போதுமானது என்பது மூத்தோர் வாக்கு. கீழக்கரை நகராட்சியின் கேடு கெட்ட நிர்வாகத்திற்கு ஆணையர் மற்றும் 20வது வார்டு மக்கள் பிரதிநிதியின் வாதங்களே போதுமானது. ஆணையரின் பதிலுரையை படித்தவர்களின் நகைப்புக்கு ஆளாகி விட்டாரே ஆணையர். இவர் படித்தவர்தானா? இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வாங்கிய மதிப்பெண்கள் எத்தனையோ? குடிநீர் கிடைக்காமல் மக்கள் படும் வேதனையை உணராத இவரால் சீரான நிர்வாகத்தை எப்படி தர முடியும்? கோடிகளில் புரளும் நகராட்சி நிர்வாகமே நீ திருந்தவே முயற்சிக்க மாட்டாயா?

    வாருகால் சிமெண்ட் மூடி திட்டம் என்னவாயிற்று? புதிய ஐந்து ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று? ஏற்கனவே உள்ள ஹைமாஸ் கம்பங்களில் எறியாத பல்புகளை மாற்றுவது எப்போது?மின் கட்டண வசூல் மையம் அமைப்பது என்னவாயிற்று?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.