
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட தாஜீநிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....
உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து எமக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கும், தேர்தல் களத்தில் அயராது உழைத்த ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்கல்லாஹ்.மேலும், இணைய வழி ஊடகம் 'கீழக்கரை டைம்ஸ்' மற்றும் அதன் வாசகர்கள், Face Book மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்த நல்லுள்ளங்கள் அனைவர்களுக்கும் நன்றி....ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பினை ஏற்பது தலையாய தார்மீகம். தேர்தலில் வெற்றி வாய்ப்பு நழுவினாலும் எமது பொதுநல சமுதாயப் பணிகள் என்றென்றும் தொடரும், இன்ஷா அல்லாஹ்
நல்ல வேட்பாளர், இவர் தனியாக போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக ஜெயித்து இருக்கலாம், ஆபிதா டீச்சரை விட
ReplyDeleteஅதிகம் வாக்கு வாங்கியிருப்பார். இவருடைய தோல்விக்கு காரணம் சேர்மன் பசீர்.