Saturday, October 29, 2011
கீழக்கரை நகராட்சி துணை தலைவர் போட்டியின்றி தேர்வு!
கீழக்கரை நகராட்சி துணை தலைவருக்கான தேர்தலில் 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஹாஜா முகைதீன் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
நகராட்சி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் இப்பதவிக்கு ஹாஜா முகைதீன் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஹாஜா முகைதீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
சரியான தேர்வு சபாஷ்
ReplyDeleteதுணைத்தலைவர் ஜனாப் ஹாஜா மொய்தீன் அவர்களுடன் உண்மையான உள்அன்போடு பழகியவர்களுக்குத்தான் அவரைப்பற்றி பூரணமாக புரிந்து கொள்ள முடியும்
ஹராமான காசுக்கு ஆசைப்படுபவர் அல்லர்
அனுபவஸ்தர்கள் கூறுவதை கேட்டு மதித்து நடக்கக்கூடிய உள்ளம் கொண்டவர்
அவர் மஹாத்மாவோ திருத்தூதரோ கிடையாது இருப்பினும் ஊர் நன்மைக்காக அவரை செயல் பட வைக்க ஊர் நலம் நாடும் நல்லவர்களால் நிச்சயமாக முடியும்
இருப்பினும் அவர் மட்டும் யோக்கியராக இருந்து பயன் இல்லை மற்றும் அவரைச் சுற்றி இருக்கும் தலைவர் உட்பட 20 உறுப்பினர்களும் ஊரின் நன்மைக்காக ஊரின் நலத்திட்டங்களை முனைப்புடன் செயல் படுத்தக்கூடிய செயல் வீர்ரளாக வீராங்கனைகளாக மாற வேண்டும் மாற முயற்சிக்க வேண்டும் லஞ்ச லாவண்ணியம் அற்றவர்களாக.
ஊர்மக்களும் பழயதையே பேசிக்கொண்டு இருக்காமல் நல்லதையே நடுவோம்
நல்லதையே நினைப்போம்
மேலும் நகராட்சியின் நியாயமான வேண்டுகோளை மதித்து நகர் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்போமாக
குறிப்பாக வீதியில் ஆட்டோ, பைக் ஜனாஸா கூட செல்ல முடியாத அளவுக்கு படிக்கட்டுகளை கட்டாமலும்
நடுவீதியில் குப்பைக்களை, மீன் கழிவு மற்றும் அதை சுத்தம் செய்த நீரை ( பிலாத் தண்ணி )கொட்டாமலும்
சிறு வயதினரை வீதியில் மலம் ஜலம் கழிக்க அனுமதிக்காமலும்
நமதூர் குப்பைகளை முடிந்த அளவு நீக்குவதில் மகத்தான சேவை செய்யும் கீ ழ க் க ரை வெ ல் பே ர் அ ஸோ ஸி யே ஷ ன் பணி ஆட்கள் வரும் வரை பொருமை காத்து அவர்களிடம் ஒப்படைத்தும்
போன்ற காரியங்களில் ஒத்துழைப்பு தந்தாலே பாதி பிரச்சனை தீரும்
செய்வோமா அல்லது நாம் மட்டும் தான் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு வீண் பேச்சால் குறை கூறிக்கொண்டே காலத்தை கடத்த போகிரோமா
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்