Wednesday, October 5, 2011

நகராட்சி தலைவராக மெஹர் பானுவை வெற்றி பெற செய்வோம் ! அப்துல் மாலிக் வேண்டுகோள் !


வேட்பாளர் மெஹர் பானு



அப்துல் மாலிக்

முன்னாள் கவுன்சிலரும் ,'பொது வேட்பாளர் தேர்தல் பணிக்குழு'வின் தலைவருமான அப்துல் மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கீழக்கரை நகராட்சி தலைவர் தேர்தலில் நமது ஊரு ஜமாத்துகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்வது சம்பந்தமாக 25-09-211 அன்று கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் OJM ஜமாத்,வடக்குதெரு ஜமாத் இரண்டும் கலந்து கொள்ளாத நிலையில் எனது தலைமையில் தேர்தல் பணிக்குழு கமிட்டி அமைக்கப்பட்டு 22-09-11 ல் மீண்டும் தெற்கு தெரு ஜமாத்தில் மேற்கண்ட கமிட்டி கூடி பொது வேட்பாளர்கள் மனு பெறப்பட்டு 27-09-11 ல் கடற்கரை பள்ளி ஜமாத்தில் மீண்டும் கூடியதில் வடக்குத்தெரு ,நடுத்தெரு ஜமாத் சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மீதி ஆறு ஜமாத் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத OJM ஜமாத்தினர் கடற்கரை பள்ளி ஜமாத்தில் கூடிய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் கீழக்கரை புது கிழக்கு தெருவில் வசிக்கும் OJM ஜமாத்தை சேர்ந்த மர்ஹீம் செ.நெ.முகம்மது ஜமாலுதீன் அவர்களின் மகள் வழி பேத்தியும் ஷெரிப்பாய் அவர்களின் மகளுமான மெஹர் பானு (48) என்ற பெண் வேட்பாளரை நமதூர் நகர்மன்ற தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார். எனவே மேற்படி வேட்பாளரை வெற்றி பெற செய்ய தாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல் பட்டு பொது வேட்பாளரின் வெற்றிக்கு உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. 2-வது கூட்டம் நடந்தது 26-9-11அன்று (22-9-11 அல்ல )

    வேட்புமனுத் தாக்கல் செய்தபோது இந்த கமிட்டியை சார்ந்தவர்கள் யாரையும் புகைப்படத்தில் காணவில்லையே ஏன்? யாரும் கலந்து கொள்ளவி்ல்லையா?or புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையா?
    வேட்புமனுத்தாக்கலுக்கே செல்லவில்லை எனில் ஒற்றுமை..???

    தினத்தந்தியில் வந்த செய்தியில் கூட
    தலைப்பில் சுயேட்சை என்றே போடப்பட்டுள்ளது.செய்திக்குள்தான் ஏதோ, அனைத்து சமூகத்தினரின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

    பொதுவேட்பாளர் என்பதை யாரும் அழுத்தி சொல்லவில்லை இதுவரை. வேட்பாளர் உட்பட.??????

    அனைத்து ஜமாத் என்ற வார்த்தை
    நீக்கப்பட்டு அனைத்து சமுதாய பொதுவேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழு என்று நீர்த்துப்போய் விட்டது.??????

    சில நாட்களாய் வானில் கருமேகங்கள் சூல்கொள்வதும் இடி இடிப்பதும் பின் கருக்கொண்ட மேகங்கள் கலைந்து போவதும் ஊரில் வாடிக்கையாகிவிட்டது.
    இதுவும், அதுவும் ஒன்றோ....!!!!!

    நடுவில் நடந்தது என்ன .......?

    நானறியேன் பராபரமே......

    ReplyDelete
  2. vision of kilakarai 2020October 7, 2011 at 7:20 PM

    அன்புக்குரியவர்களே
    கீழக்கரை மொத்த வாக்காளர் எண்ணிக்கை பற்றி தமிழக அரசு வளைதளத்தில் மட்டும் குழப்பம் இல்லை
    பொது வேட்பாளர் அறிவிப்பிலும் மக்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறர்கள் சில மெத்தத் தெரிந்த அறிவு ஜீவிகள்
    கிளம்பிட்டங்கய்யா ஒரு கூட்டம் பெண்கள் உட்பட நகராட்சியை கூர் போட
    தாங்காது அம்மா தாங்காது
    இறையோனிடம் நல்லது மட்டுமே நடக்க துவா செய்வோமாக வேறு வழி தெரியவில்லை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.