தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில்..
கீழக்கரை புதிய நகராட்சி நிர்வாகம் இன்று பொறுப்பேற்ற நிலையில் கீழக்கரை நகர் முழுவதும் சுகாதார பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிலைமை உள்ளது.
கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் அருகில் சாலைமுழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
இது குறித்து தெற்குதெருவை சேர்ந்த சூபியான் கூறியதாவது ,இப்பகுதி கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் ரோட்டிலேயே தேங்கி நிற்கிறது.இதனால் இப்பகுதி வீட்டை வெளியே வருவதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறார்கள் .மேலும் இதனால் கொசுக்கள் அதிகமாகி மலேரியா,போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட வேண்டும் .என்றார்.
படம் மற்றும் தகவல் - சூபியான்
அத்திலை தெரு பகுதியில் ....
அதே போல் கீழக்கரை அத்திலை தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையில் மழை தண்ணீர் தேங்கி அப்பகுதி முழுவதும் குளம் போல் காட்சியளிக்கிறது. புதியதாக அமைக்கப்பட்ட சாலை முறையாக அமைக்கப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
படம் மற்றும் தகவல் - பசீர் அகமது ரசீன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.