கீழக்கரை,
நகராட்சிகளுக்கான அரசு வலைத்தளங்கள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். கீழக்கரை நகராட்சி வாக்காளர் எண்ணிக்கை குறித்து அரசு வெப்சைட்டில் தவறான தகவல்களே இடம்பெற்றுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் வசதியாக வலைத்தளங்கள் (வெப்சைட்) இயங்கி வருகின்றன. இவை முறையாக அப்டேட் செய்யப்படுவதில்லை. இதனால், காலாவதி தகவல்களும், குழப்பமான தகவல்களும் இடம்பெற்று பார்க்கிறவர்களை மேலும் குழப்பி விடுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள்,http://municipality.tn.gov.in/keelakarai/egovernance.html
என்ற முகவரியில் செயல்படும் வலைத்தளத்துக்கு செல்லலாம்.
இந்த வலைத்தளத்தில், கீழக்கரை வாக்காளர் எண்ணிக்கை என்ற தலைப்பில், வார்டு வாரியாக ஆண், பெண் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களின் ஆண்க ளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 721 எனவும், பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 355 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையாக 9 லட்சத்து 24 ஆயிரத்து 74 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வார்டு வாரியாக குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் மொத்த வாக்கா ளர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 73தான் இருக்கிறது. இதில், எது சரி என்று பொதுமக்கள் குழம்புகின்றனர்.
இதுகுறித்து, கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இது குறித்து பல முறை செய்திகள் வந்தும் இது வரை எந்த மாற்றமும் இல்லை .உடனடியாக இணையதளத்தை அப்டேட் செய்ய வேண்டும்.அப்போது தான் இந்த குழப்பம் தீரும் என்றனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.