கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் கல்லூரியின் முதல்வர் சுமையா தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எம்.எஸ்.ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கருப்பசாமி கலந்து கொண்டு ரத்ததானம் பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். முன்னதாக நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ஜீலி பெனித்தா அனைவரையும் வரவேற்றி பேசினார்.இம்முகாமில் கல்லூரி ஆசிரியைகளும் ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனர்.முதல் கட்டமாக 58 மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.இறுதியாக திட்ட அலுவலர் எஸ்தர் ஷீபா மெர்லின் நன்றி கூறினார்.
இது குறித்து மருத்துவர் செல்வேந்திரன் கூறியதாவது,ரத்ததானம் செய்த மாணவிகள் அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.இது போன்று மாணவ,மாணவிகள் மத்தியில் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.