கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபியத்துல் காதரியா
(அதிமுக) வெளியிட்டுள்ள அறிக்கையில்..
எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் என்னை வெற்றி பெற செய்த கீழக்கரை மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு வாய்ப்பளித்த புரட்சிதலைவி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
முதல்முறையாக அதிமுகவை கீழக்கரையில் மக்கள் வெற்றிபெற செய்துள்ளதால் தொடர்ந்து இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள கட்சியின் சார்பாகவும்,அரசு சார்பாகவும் மக்களுக்கான நலதிட்டங்களை நிறைவேற்ற அதிகமான அளவில் நிதிகளை பெற்று திட்டங்களை நிறைவேற்றுவேன்.நிச்சயம் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.எனது நிர்வாகத்தில் யாருடைய தலையீடும் இருக்காது.மக்களுக்கான நிர்வாகமாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.கீழக்கரையின் அடிப்படை பிரச்சைனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
எனது வெற்றிக்கு உழைத்த அதிமுக நிர்வாகிகள் ,தொண்டர்கள், எனது சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்கள்,எனக்கு உறுதுணையாக இருந்த எனது கணவர் மற்றும் குடும்பத்தார்,சமுதாய பெரியவர்கள், சகோதர,சகோதரிகள் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !
உங்கள் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த நமது முன்னாள் சேர்மன் பசீர் அவர்களை மறந்து விட்டீர்களே !
ReplyDelete