Friday, October 28, 2011

கீழக்கரை குப்பையும்.. தீர்வுகளும்...

2010ல் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தோணிப்பலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்தினர்(பழைய பைல் படம்)


குப்பை கொட்டும் இடத்தை ஆய்வு செய்த மாசுக்கட்டுபாட்டு துறை


நகரை மேம்படுத்தும் கடமை நகராட்சியை சார்ந்தது. நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே மக்கள் செழிப்பாக இருக்க முடியும். அடுத்து வரும் 20 ஆண்டுக்கு மக்கள் தொகை எந்த அளவு உயரும் என்று திட்டமிட வேண்டும்; அதற்கேற்ப தண்ணீர் இருப்பு தேவை, திடக்கழிவு வெளியேறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள புதிய திட்டம் தயாரிக்க வேண்டும். அதற்கேற்ப, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் பண்ணைகளை அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு, நகராட்சி நிர்வாகங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வணிக வளாகம் கட்டுதல், கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவிர ரோடு, தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.


ஆனால் இவ‌ற்றை அனைத்தையும் பின்னுக்கு த‌ள்ளி இன்று கிழ‌க்க‌ரையில் த‌லை தூக்கி நிற்ப‌து குப்பை பிர‌ச்ச‌னைதான். கீழக்கரை 13000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் சேர்கிறது.

முந்தைய நகரசபை ஆட்சி காலத்தில் கீழக்கரை தோணிபாலம் அருகில் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசன் ஏற்பாடின் பேரில் கீழக்கரை நகராட்சிக்கு தரப்பட்ட 11.5 ஏக்கர் இடத்தில் கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட கீழக்கரை நகராட்சியால் முடிவு செய்யப்பட்டு குப்பைகள் அங்கு கொட்டபட்டு வந்தது அந்த இடத்தை சுற்றி சுற்றுப்புற சுவர் கட்டும் பணியும் தொடங்கியது இங்கு சேரும் குப்பைக‌ளை ம‌றுசுழ‌ற்சி செய்து உர‌ம் த‌யாரிப்ப‌து போன்ற‌வ‌ற்றிருக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌து. ஆனால் குப்பைகளை இங்கு கொட்ட கூடாது எங்கள் பகுதியின் சுகாதாரம் பாதிக்கிறது என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இது தொடர்பாக‌ 2010 ஜீன் மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், தில்லையேந்தல் ஊராட்சி பள்ள மோர்க்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் பெயரில், பொது நல வழக்கு (W.P. (MD) No. 9602/2010) தொடுக்கப்பட்டது. இதைய‌டுத்து அப்ப‌குதியில் குப்பை கொட்டுவ‌து நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.சுற்றுசுவ‌ர் க‌ட்டுவ‌தும் த‌டைப‌ட்ட‌து.பின்னர் கீழக்கரை,தில்லையேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து இந்த பிரச்னையில் தீர்வு காண வேண்டும் குப்பை கொட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மறுபரீசலனை செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாடு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் மனோகரன் தலைமையில் குழு கீழக்கரை ,மற்றும் தில்லையேந்தல் பகுதியை சேர்ந்த குறிப்பிட்டவர்களை அழைத்து பேசி கருத்து கேட்டனர் .பின்னர் குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ச‌ம‌ர்பித்த‌ன‌ர். பின்ன‌ர் இது தொட‌ர்பாக‌ என்ன‌ மாதிரியான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்று த‌ற்போதைய‌ ந‌கராட்சி க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும்.


மேலும் த‌ற்காலிக‌மாக‌ வெல்பேர் டிரஸ்ட் ஏற்பாட்டில் த‌னியார் தோட்ட‌த்தில் கீழ‌க்க‌ரையின் குப்பைக‌ள் கொட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.என‌வே உட‌ன‌டியாக‌ நிர‌ந்த‌ர‌மாக‌ குப்பை கொட்டும் த‌ள‌த்தை ஏற்பாடு செய்ய‌ ண்டும்.தில்லையேந்தலில் அமைந்துள்ள இடத்திற்கான பிர‌ச்ச‌னை தீர்வு காண‌ நாள‌கும் ப‌ட்ச‌த்தில் உட‌ன‌டியாக‌ மாற்று இட‌த்தை தேர்வு செய்ய‌ வேண்டும்.கிழக்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றியுள்ள‌ ப‌குதியில் அர‌சு புற‌ம்போக்கு நில‌த்தை க‌ண்ட‌றிந்து மாற்று ஏற்பாட்டை காலம் தாழ்த்‌தாம‌ல் செய்ய‌ வேண்டும்.


குப்பைக‌ளை ஒரு ப‌குதியில் கொட்டுவ‌தால் அப்ப‌குதி ம‌க்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டாம‌ல் இருக்க‌ என்ன‌ செய்ய‌லாம் என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் ஒருவ‌ரிட‌ம் கேட்ட‌ போது ,தற்போது குப்பைகளை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அகற்றுவதற்கு சில நிறுவனங்கள்(ஹேன்ஜெர் போன்ற‌ நிறுவனம்) ஆலைகளை அமைத்து தருகின்றனர் இந்த ஆலைக்குள் கொண்டுவரப்படும் குப்பைகளை 4 பிரிவாக தரம் பிரித்து அதில் 25 சதம் மின்சாரமாகவும், 30 சதம் பசுமை உரமாகவும், 20 சதவீதம் மறுசுழற்சி முறையில் மீண்டும் பிளாஸ்டிக், 15 சதம் மணலாகவும் உற்பத்தி செய்யப்படும். மீதம் பயன்படுத்த முடியாத 10 சதவீத கழிவுகள் விஞ்ஞான வழிமுறையில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படும். இதனால், நிலத்தடி நீர் மாசுபடுவது தவிர்க்கப்படும். குப்பையில் இருந்து மறுசுழற்சிமுறை உற்பத்தி முழுவதும் மூடிய நிலையிலேயே நடைபெறுவதால் வெளிப்புறத்தில் சுகாதார பாதிப்போ, துர்நாற்றமோ ஏற்பட வாய்ப்பில்லை. இத்திட்ட‌த்தை அப்பகுதி ம‌க்க‌ளிட‌ம் எடுத்து கூறி செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.என்றார்.

மேலும் த‌ற்போது துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை அதிக‌ப்ப‌டுத்த‌ வேண்டும். கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ எக்ஸ்னோரா போன்ற‌ தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ,ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ளை அழைத்து பேசி ஆலோச‌னை குழு ஒன்றை அமைத்து கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிரந்தர தீர்வு காண‌ வேண்டும் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ராக‌ பொறுப்பேற்றுள்ள‌ ராபிய‌த்துல் காத‌ரியாவுக்கு ச‌வாலாக‌ விள‌ங்க‌ போவ‌து இந்த‌ குப்பை பிர‌ச்ச‌னைதான் சவால்கள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றுவார் என கீழக்கரை மக்கள் பெரும் நம்பிகையோடு காத்திருக்கின்றனர்

2 comments:

 1. vision of kilakarai 2020October 28, 2011 at 8:48 PM

  அன்புடையீர்

  கீழக்கரை நகரின் பெரும் தலைவலியாக இருக்கும் குப்பைகளை அகற்றுவது சம்பந்தமாக தங்களின் பதிவு மிகவும் வரவேற்கதக்கது பாரட்டுக்குரியது

  நகராட்சி தலைவராக சமீபத்தில் பதவி ஏற்று இருக்கும் சகோதரி ராபியத்துல் காதரியா அவர்களை இதய பூர்வமாக வாழ்த்தி வரவேற்கும் அதே காலக்கட்டத்தில்

  ஊர் மக்களின் பிரதான எதிர்பார்ப்பான குப்பைகளை அறவே நீக்குவது

  கழிவு நீர் கால்வாய்களை முறையாக மூடி சுகாதார சீர்கேட்டை சரி செய்வது

  வயோதிகர்களும் மூட்டு வலிகாரர்களும் சீராக நடந்து செல்லும் விதமாக சாலைகளில் உள்ள மேடு பள்ளகங்களை உடனடியாக சீரமைப்பது

  போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்து கவனம் செலுத்த ஊர் மக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கோள்கிறோம்

  அன்பு சகோதரியே இளம் வயது காரணமாக உங்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாக திறமை அபரிதமாக இருக்க வாய்ப்பிள்ளை ஆகவே அரசியல் கண்ணோட்டம் காணாது ஊர் பெரியவர்களையும், பொதுநல சங்கங்களையும், சமூக ஆவலர்களயும்
  கலந்து ஆலோசித்து நிறைவான நடவடிக்கைகளை எடுத்து நல்ல பெயர் எடுக்க எங்களது இனிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நீண்ட நாட்களுக்கு பிறகு உஙகளின் அழகிய‌ ஆழமான கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.