Saturday, October 15, 2011
ஜவாஹிருல்லாஹ் எங்களை தமுமுகவிலிருந்து நீக்க முடியாது ! மூஜீப் ஆவேசம் !
தமுமுகவின் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ள கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கீழக்கரை முஜீப் கூறியதாவது....
தமுமுகவில் பல ஆண்டுகளாக பல் வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றியுள்ளேன் . தமுமுக சார்பில் 15ந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை எங்களின் முயற்சியால் வாங்கப்பட்டு மக்களுக்கு அர்பணித்துள்ளோம்.இறந்த உடல்களை பாதுகாத்து வைக்க குளிரூட்டும் பெட்டிகள் 10க்கும் மேற்பட்டவைகள் நம் முயற்சியால் வாங்கியுள்ளோம்.இன்னும் பல நல காரியங்களை ஆற்ற வியர்வை சிந்தி கடுமையாக உழைத்துள்ளோம்.இது இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும்.
2009ல் நான் தலைவராக இருந்த போது தமுமுகவுக்கு துரோகம் செய்து நீக்கப்பட்ட சிராஜ்தீன் போன்றவர்களுக்கு மேலிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது இதே சிராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் காங் ஹசன் அலிக்கு வாக்கு கேட்டவர்.
திமுகவின் கோட்டையாக இருந்த கீழக்கரையை தமுமுக கோட்டையாக மாற்றி கடந்த சட்டசபை தேர்தலில் நான்,ஹுசைன்,உஸ்மான்,ஜெயினுலாப்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் பாடுபட்டு ஜவாஹிருல்லாவை வெற்றி பெற செய்தோம்.
அதே போல் நடைபெற இக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமுமுக சார்பில் தாஜுனிசா லாத்தாவை போட்டியிட செய்ய பரிந்துரைத்தோம் ஜவாஹிருல்லா ஏற்க மறுத்து வேறு ஒரு வேட்பாளரை தேட சொன்னார் எனவே ஆசிரியை ஆபிதாவை தமுமுக சார்பில் போட்டியிடுமாறு கேட்டு கொண்டோம் ஆபிதா அவர்களும் ஒத்து கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்ய சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ போன் செய்து எங்களிடம்(தமுமுக நிர்வாகிகள்) ஆசிரியை ஆபிதா தமுமுக சார்பில் போட்டியிட வேண்டாம் என்றும் பொது வேட்பாளர் என்று அழைக்கப்படும் மெஹர் பானுவை ஆதரிக்க சொன்னார்
உடனடியாக நாங்கள் மறுத்து விட்டு ஆபிதா அவர்களை சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்தோம் .காரணம் தெற்கு தெரு ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மெஹர் பானு பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கபட்டார் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு தெரு மட்டும்(தெற்குதெரு) மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது வேறு எந்த ஒரு ஜமாத்தும் அவரை ஆதரித்து கடிதம் கொடுக்கவில்லை.மேலும் இவர் மீது(மெஹர் பானு என்ற நிலவு) குற்றச்சாட்டுகள் உள்ளது நாங்கள் அவரை ஆதரிக்க மாட்டோம் என்றோம் . உடனே ஜவாஹிருல்லா மெஹர்பானுவுக்கு தமுமுக ஆதரவு தரும் என்று அறிவிப்பு வெளியிட்டு எங்களையும் நீக்கியுள்ளார்.
ஜவாஹிருல்லா அவர்களும்,ஹைதர் அலி அவர்களும் மாநில நிர்வாகிகளிடம் எங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக கூறிவிட்டு கட்சியிலிருந்தே நீக்கம் செய்வதாக அறிவித்து விட்டார்கள்.இதனால் தமுமுக மாநில நிர்வாகிகள் ஜவாஹிருல்லா மீது அதிருப்தியில் உள்ளார்கள்.தமுமுகவின் சட்டதிட்டப்படி முதலில் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும், மாநில நிர்வாகிகளுக்கு தகவல் தர வேண்டும்.இவை எதையுமே செய்யவில்லை
மேலும் நான் மாவட்ட பொருளாளர் ,உசைன் நகர தலைவர் ,உஸ்மான் நகர செயலாளர் நீக்கம் என்றல்லவா செய்தி வெளியிட்டிருக்க இருக்க வேண்டும் ஆனால் கட்சியின் அமைப்புக்குழுவிலிருந்து நீக்கம் என்று வெளியிட்டுள்ளார்கள் அமைப்புக்குழு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது எனவே இந்த நீக்கம் செல்லாது.ஜவாஹிருல்லா ,ஹைதர் அலி போன்றவர்கள் அடிக்கடி சொல்வார்கள் கலிமா சொன்னவன் எல்லாம் தமுமுககாரன் என்று அந்த வகையில் தமுமுக யாருக்கும் சொந்தம் கிடையாது ,நாங்கள் தமுமுகவிலேயே நீடிக்கிறோம்.ஜவாஹிருல்லா எங்களை கட்சியிலிருந்து நீக்க முடியாது தேவைபட்டால் கோர்ட்டு வரை செல்வோம் .
எங்களின் நீக்கப்பட்டதாக வந்த அறிவிப்பின் பிண்ணனியில் இருந்து செயல்பட்டது நல்ல முகம்மது களஞ்சியம் மற்றும் சிராஜ்தீன் ஆகிய இருவர்தான் .
தற்போது நகராட்சி தலைவருக்கு சுயேச்சை வேட்பாளராக போயிடும் ஆசிரியை ஆபிதாவை ஆதரிக்கிறோம் மேலும் 7 வார்டுகளில் போட்டியிடும் தமுமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவு தெரிவித்து பணியாற்றி வருகிறோம்.
திமுக ஊர்வலத்தில் பெரியவர்கள் சிலர் என்னை அழைத்திருந்தார்கள் அதனடிப்படையில் கலந்து கொண்டேன்.அதற்காக ஆதரவு என்று அர்த்தமல்ல.திமுகவில் நகர் செயலாளர் பதவி தருகிறோம் என்றார்கள்.இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுபவனல்ல நான் தமுமுகவில் தொடர்கிறேன் என்பதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
திமுக ஊர்வலத்தில் கலந்து கொள்வாராம் ஆனால் பேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பாராம்!
ReplyDeleteஇவரை வைத்து தமுமுக வளர்ந்ததா அல்லது தமுமுக மூலம் இவர் வளர்ந்தாரா?
இவர் ரேசன் கடைகளில் மாமூல் வாங்கி தானே தனது காருக்கு டீசல் போடுகிறார்.
you are always welcome to our வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ReplyDeleteyou are always welcome to our வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ReplyDeleteஇவர்களுக்கு பதவி ஆசை....! அதனால் சாந்தி சிரிச்சி இப்படி கேவலாமா நிற்கிறார்கள்...! இன்னும் என்ன ஆகப்போகிரார்களோ...! நம்மைப் படைத்த வல்ல இறைவன் தான் நாம் அனைவரையும் காப்பாத்த வேண்டும்...! இன்ஷா அல்லாஹ்...!
ReplyDeleteதற்போது நமது சமுதாயத்தை சார்ந்தவர்களில் சிலர் செய்யும் செயல்களை கண்டு நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது. வேதனையாகவும் இருக்கிறது. சமுதாய அமைப்பை விட்டு அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் சென்றால் கழிவு நீர்த்தொட்டியாகத்தான் மாறவேண்டிவரும்.
தனிப்பட்ட மனிதனாக இருக்கும்போது அல்லாஹ்விற்குப் பயந்து பலநன்மைகள் செய்வதற்கு முன்வருவார்கள். அன்று பொதுநலம் மட்டும் அவரின் உள்ளத்தில் தென்பட்டது.
ஆனால் அரசியல் கட்சி என்கிற வலைக்குள் சிக்கும்போது பொதுநலம் தொலைந்து தனக்கு சுயநலம், பதவி ஆசை, பொன்னாசை, பொருளாசை போன்றவற்றில்தான் முழுக்கவனம் செலுத்தவரும். இன்று இவர்களுக்கு உலக ஆசை மட்டும்தான் மனதில் காட்சியளிக்கிறது.
அல்லாஹ் உதவிக்கொண்டு நாம் எவ்வாறு கண்ணியமாக வாழவேண்டும் என்பதை மறந்துவிட்டு மானமரியாதையை இழந்து, பலர் வேதனைப்படுளவிற்கு கேவலமாக கட்சி என்கிற அடிப்படையில் மக்களின் நலனை மனதில் என்னாத மமகவினர் சந்தியில்சிரிச்சி வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். இது தேவைத்தானா? முதலில் மமக கட்சி நடத்தும் தலைவர்களை கண்டிப்பதை விட இவர்களுக்கு பின்னால் உறுப்பினர்களாக வால்பிடித்து திரியும் எண்ணற்ற சகோதரி, சகோதரர்களைத் தான் நாம் குறைகூறவேண்டும்.
அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே இனிமேலாவது இவர்களின் பொய்யான பேச்சுகளை நம்பி இவர்கள் நடத்தும் கட்சியில் இருப்பதைவிட யார் நமது சமுதாய மக்களுக்காக எந்தவித அரசியல் நோக்கமில்லாமல் பாடுபடுகிறார்களோ அல்லாஹ் உதவிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து பாடுபடுவதற்கு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உண்மை எப்போதும் கிணற்றில் கிடக்கும் கற்களைப் போன்றது. ஆகவே அல்லாஹ்விற்கு பயந்து உண்மையாக வாழும் அன்புச்சகோதரர்களின் ஆலோசனை அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
நம்மில் நிறையப்பேர் போலித் தனமாகத்தான் இறைவசனத்தையும், முஹம்மது நபி (ஸல்)அலை அவர்களின் வாழ்க்கை முறை ஹதீஸ்களையும் உதட்டளவில் மட்டும்தான் பேசித்திரீகிறார்கள் ஆனால் தங்களது உள்ளத்தில் சுமந்து இதயபூர்வமாக பேசுவதில்லை என்பது நன்றாக விளங்குவிறது. அல்லாஹ் என்னையும், உங்களையும் தவறான எண்ணங்களை விட்டும், சிந்தனையை விட்டும், சைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்து நாம் அனைவரையும் நேரான வழியில் வாழ வைப்பானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
நம்மிடம் ஒற்றுமை என்கிற ஒரு நல்ல பந்தம் தொலைந்து வெகுநாளாகிவிட்டது. காரணம் தனது சுயநலத்திற்கு சமுதாயத்தை பங்குபோட நினைக்கும் சில சகோதரர்களினால்தான் என்பதை மறுக்கமுடியாது. சிலர் நினைக்கிறார்கள் நாம் நினைப்பது மற்றவர்களுக்கு தெரியாது அதனால் நாம் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்று அல்லாஹ்வை மறந்து செயல்படுகிறார்கள். நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை அல்லாஹ் உலகில் வாழும் மனிதர்களுக்கு உணர்த்திவிடுவான் என்பதை மறக்க வேண்டாம்.
ஆகவே! இந்த மமகவைபோல் நாம் பிளவுப்படவேண்டாம். இன்ஷா அல்லாஹ். தற்போது இவர்களுக்குள்ளே நடக்கும் சண்டை சமுதாய ஒற்றுமைக்காக அல்ல. இவர்களின் பைகளை நிரப்ப பலரின் அரவணைப்பில் பதவி என்கிற நாற்காலியில் அமர்வதற்காக என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இவர்கள் ஆதாயம் பெற நாம் ஏன் நமக்குள் பகைத்துக்கொள்ளவேண்டும். நாம் ஒற்றுமை என்கிற சங்கிலியை பிடித்துக்கொண்டு சகோதரர்களாக வாழ்வோம். இன்ஷா அல்லாஹ். நாளை நமது சமுதாய மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் நாம் அனைவரும் ஒற்றுமைக்காப்போம். இவர்களுக்கு நான் என்கிற உச்சரிப்பு மட்டும் தான் தெரிகிறது நாம் என்ற உச்சரிப்பு மறந்துவிட்டார்கள் அதானாலே என்னவோ இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். சுபாஹானால்லாஹ..!
வேண்டாம் நண்பா நமக்கு அரசியல் கட்சி. நாம் நமது சமுதாய மக்களுக்காக அல்லாஹ்வின் உதவியால் முஹம்மது நபி ஸல் (அலை) காட்டித்த வழிமுறைப்படி வாழ்வதற்கு முயற்சி செய்வோம். இந்த மமகவைபோன்றவர்களுக்குப் பின்னால் அலைந்து காலங்களை வீணாக்குவதைவிட நம் எதிர்கால வாழ்வு, பொருளாதாரம், நம் குடும்பம், உறவு, நமது நாடு, நமது ஊர், நமது சமுதாயம், நமது நாட்டு மக்கள் என்பவற்றை யோசித்து அல்லாஹ் உதவிக்கொண்டு நமக்குள் எவ்வித பிளவு இல்லாமல் பலரின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வாழ முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்...!
யார் நல்லவர்கள் யார் கேடடவர்கள் என்று சிந்தித்து செயல்படுங்கள்...! அல்லாஹ்விற்கு பயந்து யார் உண்மையாக வாழ்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து சமுதாயம், நாட்டிற்காக பாடுபடுங்கள். இன்ஷா அல்லாஹ்...உங்கள் அனைவருக்கும் இறைவனின் உதவியால் வெற்றி கிட்டும்...!
இவர்களுக்கு பதவி ஆசை! அதனால் சாந்தி சிரிச்சி இப்படி கேவலாமா நிற்கிறார்கள்! இன்னும் என்ன ஆகப்போகிரார்களோ! நம்மைப் படைத்த வல்ல இறைவன் தான் நாம் அனைவரையும் காப்பாத்த வேண்டும்! இன்ஷா அல்லாஹ்!
ReplyDeleteதற்போது நமது சமுதாயத்தை சார்ந்தவர்களில் சிலர் செய்யும் செயல்களை கண்டு நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது. வேதனையாகவும் இருக்கிறது. சமுதாய அமைப்பை விட்டு அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் சென்றால் கழிவு நீர்த்தொட்டியாகத்தான் மாறவேண்டிவரும்.
தனிப்பட்ட மனிதனாக இருக்கும்போது அல்லாஹ்விற்குப் பயந்து பலநன்மைகள் செய்வதற்கு முன்வருவார்கள். அன்று பொதுநலம் மட்டும் அவரின் உள்ளத்தில் தென்பட்டது.
ஆனால் அரசியல் கட்சி என்கிற வலைக்குள் சிக்கும்போது பொதுநலம் தொலைந்து தனக்கு சுயநலம், பதவி ஆசை, பொன்னாசை, பொருளாசை போன்றவற்றில்தான் முழுக்கவனம் செலுத்தவரும். இன்று இவர்களுக்கு உலக ஆசை மட்டும்தான் மனதில் காட்சியளிக்கிறது.
அல்லாஹ் உதவிக்கொண்டு நாம் எவ்வாறு கண்ணியமாக வாழவேண்டும் என்பதை மறந்துவிட்டு மானமரியாதையை இழந்து, பலர் வேதனைப்படுளவிற்கு கேவலமாக கட்சி என்கிற அடிப்படையில் மக்களின் நலனை மனதில் என்னாத மமகவினர் சந்தியில்சிரிச்சி வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். இது தேவைத்தானா? முதலில் மமக கட்சி நடத்தும் தலைவர்களை கண்டிப்பதை விட இவர்களுக்கு பின்னால் உறுப்பினர்களாக வால்பிடித்து திரியும் எண்ணற்ற சகோதரி, சகோதரர்களைத் தான் நாம் குறைகூறவேண்டும்.
அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே இனிமேலாவது இவர்களின் பொய்யான பேச்சுகளை நம்பி இவர்கள் நடத்தும் கட்சியில் இருப்பதைவிட யார் நமது சமுதாய மக்களுக்காக எந்தவித அரசியல் நோக்கமில்லாமல் பாடுபடுகிறார்களோ அல்லாஹ் உதவிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து பாடுபடுவதற்கு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். உண்மை எப்போதும் கிணற்றில் கிடக்கும் கற்களைப் போன்றது. ஆகவே அல்லாஹ்விற்கு பயந்து உண்மையாக வாழும் அன்புச்சகோதரர்களின் ஆலோசனை அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
நம்மில் நிறையப்பேர் போலித்தனமாகத்தான் இறைவசனத்தையும், முஹம்மது நபி (ஸல்)அலை அவர்களின் வாழ்க்கை முறை ஹதீஸ்களையும் உதட்டளவில் மட்டும்தான் பேசித்திரீகிறார்கள் ஆனால் தங்களது உள்ளத்தில் சுமந்து இதயபூர்வமாக பேசுவதில்லை என்பது நன்றாக விளங்குவிறது. அல்லாஹ் என்னையும், உங்களையும் தவறான எண்ணங்களை விட்டும், சிந்தனையை விட்டும், சைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்து நாம் அனைவரையும் நேரான வழியில் வாழ வைப்பானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.