நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சிக்கு அதிமுக சார்பில் 6 கவுன்சிலர்களும்,திமுக சார்பில் 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ் சார்பில் 1 கவுன்சிலரும் , சுயேச்சையாக 10 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 25ம் தேதி பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து துணை சேர்மன் தேர்தல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இப்பதவிக்கு இப்பதவிக்கு அதிமுக சார்பில் 9வது வார்டில் வெற்றி பெற்ற ஹாஜா முகைதீன் ,1வது வார்டில் வெற்றி பெற்ற சுரேஷ் ஆகியோர் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான கவுன்சிலர்கள் தாங்கள் ஆதரவு தெரிவிக்க குறைந்தது ரூ 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை பகிரங்கமாக பேரம் பேசுவதாக கூறப்படுகிறது. மேலும் "நாங்கள் சொல்லும் ஆளுக்குத்தான் கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்" என்று கூறி சில புரோக்கர்களும் ரூ50,000 வரை கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, இன்னும் பதவியேற்கவே இல்லை அதற்குள் பகிரங்கமாக சில கவுன்சிலர்கள் பேரத்தில் இறங்கிவிட்டார்கள்.இத்தனை ஆயிரங்கள் செலவழித்து நகராட்சி துணை தலைவராக வருபவர்கள் நிச்சயம் அதனை திரும்ப பெறுவதற்கான வழிகளில் இறங்கமாட்டார் என்று என்ன நிச்சயம். முதல் முறையாக கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலரும் இந்த பேரத்தில் மும்முரமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.இங்கிருந்துதான் ஊழல் தொடங்குகிறது இதை அனுமதிக்க கூடாது .மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவுன்சிலர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்
இது குறித்து கீழக்கரை முஜீப் கூறியதாவது, மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறி கவுன்சிலராக ஜெயித்து விட்டு இது போன்ற பேரத்தில் ஈடுபடும் கவுன்சிலர்களை வண்மையாக கண்டிக்கிறேன்.மேலும் நகராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் பணம் வாங்கியதாக தெரிய வந்தால் அவர்கள் யார் என்பதை பகிரங்கமாக நோட்டீஸ் அடித்து மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்பதை கூறி கொள்கிறேன் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Sabaashhhhhhhhhhhh...Mujib Kakka
ReplyDeleteஇவர்களது கட்சியை சார்ந்தவர்களை தவிர சுயேட்சே வேட்பாளர்கள் யாரும் பணம் வாங்காமல் இவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை பொருத்திருந்து பார்க்களாம், இவர்கள் முகமூடி கிழிக்கப்படுகின்றதா என...போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றதா என...................
ReplyDelete